பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 187

அவனுக்கே இரண்டாவது எண்ணமாகத் தோன்றியது இப்போது.

தீமைகளை எதிர்த்துப் போராட நினைத்து இன்று சகல தீமைகளின் உருவமாகவும் தானே ஆகிச் சீரழிந்தி ருப்பதை நினைத்தபோது திருவின் மனக்குமுறல் அதிக மாகியது. நிலையிலிருந்து, புறப்பட்ட தேர் முறை கெட் டுத்தாறுமாறாக ஒடிப் பல வருடங்கள் கழித்து நிலைக்கு வருவதைப் போல் தானும் இப்போது தொடங்கிய இடத் துக்குத் திரும்பி வந்திருப்பதாக அவனுக்கு நினைக்கத்

தோன்றியது. く ・ "

அவனும் சண்பகமும் காத்லித்த அன்றையத் தேரடி தந்தவனம் கிளிகொஞ்சும் பசுஞ் சோலையாயிருந்தது. அன்றைய தாமரைக்குளம், அன்றையக் கோயில், அன் றைய தேரடி எதுவுமே இன்று எழிலிருப்பில் இல்லை. ஊரைச் சுற்றி ஏழெட்டு புதுத் தியேட்டர்கள் வந்திருந்தன. கூட்டமும் கலகலப்பும் அப்பகுதிக்கு இடம் மாறி விட்ட தாக மக்கள் கூறினார்கள். -

'ஊரவர் கூடி

உற்சவம் எடுத்துப் பேரினை வளர்த்துப்

புகழினைப் பெருக்கி என்னுள் எதைக் கொன்றார்?

என்னில் எதை அழித்தார்?-அவித்தார்?'

என்று மறுபடியும் தனக்குத்தானே கேட்டுக் கொண்டான்

பல ஆண்டுகளுக்கு முன் இந்த இடத்தில் இந்த மண் னில் இருந்து கீழே விழுந்து மறுபடி எழுந்த போது வாழ் வைப் பற்றிய துடிப்பும், துணிவும் தாகமும், தவிப்பும், நேர்மையும் தன்னுள் இருந்ததுபோல் இப்போது மீண்டும்