பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கணல் 17

மற்றொரு பகுதியில் உள்ளேயே இருந்தது. அவனையும் தன் குடும்பத்தில் ஒருவனைப் போல் சேர்த்துக்கொண்டு வேளாவேளைக்குச் சாப்பாடு போட்டுக் காப்பாற்றினார் பண்டாரம். - - - -

காயங்கள் ஆறி உடம்பு தேறுகிற வரை பூக் கட்டும் மண்டபத்தில் அவன் படுத்திருந்த கயிற்றுக் கட்டிலுக்கே சாப்பாடு தேடி வந்து விடும். சண்பகம்தான் கொண்டு வருவாள். உடம்பு தேறி எழுந்து நடமாடத் தொடங்கிய பின் அவன் பண்டாரத்தின் வீட்டுக்கே போய்ச் சாப்பிடத்

தொடங்கினான். .

அங்கே அவர்களுடைய வேலைகளை மெல்ல மெல்ல அவனும் பங்கிட்டுக் கொண்டு செய்யத் தொடங்கிய போது, 'தம்பீ! நீ இப்பிடி எல்லாம் சிரமப்புடனும்கிற தில்லே...' என்று பண்டாரம் உபசாரமாக மறுத்ததை அவன் ஏற்கவில்லை. ஏக்கர்க் கணக்கில் மல்லிகையும், முல்லையும். ரோஜாவும், பூத்துக் குலுங்கும் அந்தப்பெரிய நந்தவனத்தில் அதிகாலையில் பூக்களைக் கொய்வது தொடங்கிப் பல வேலைகளைத் திருமலையும் தானாகவே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தான், சண்யத்திடம் பூத்தொடுக்கக் கற்றுக் கொண்டான். சந்தனம் அரைத் தான். அது நல்தோர் உடற்பயிற்சியாகவும் அமைந்தது. அதிகப் பருமனில்லாமல் வெடவெட என்றிருந்த அவன் உடல்வாகு பாக்குமரம், தென்னை மரம் ஏற வசதியா யிருந்தது. பாக்குக்குலை, தேங்காய், இளநீர் பறிக்கிற வேலையையும் அவன் மேற்கொண்டான். மனிதர்களின் துவேஷம், வஞ்சகம், வெறுப்பு, சொத்து, ஆசை, குரோதம், கொலை வெறி இவற்றை எல்லாம் உள்பட்ட ணத்துப் பெரும் புள்ளிகளிடம் பார்த்துப் பார்த்துச் சலித்தி ருந்த அவனுக்குப் பூக்கள், செடி, கொடிகள், பசுமை இவற்றினிடையே ஊடாடுவது மிகவும் பிடித்திருந்தது.

"உனக்குப் பிடித்தால் நீ இங்கேயே இருக்கலாம்! எனக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை. ஆனால் நான்