பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 189:

யில் திருவைக் காணாமல் திகைத்து வாட்ச்மேனிடம்

விசாரித்திருக்கிறார்கள். -

"எங்கேயோ போர்வையை எடுத்துப் போர்த்திக்கிட்டு:

வெளியே போனாருங்க" என்றான் அவன்.

தோடிப் பகுதியின் மேல் அவனுக்கு இருந்த ஸெண்டி

மெண்டல் அட்டாச்மெண்ட் சர்மாவுக்கு நன்கு தெரியு. மாதலால் உடனே காரைத் தேரடிக்கு விடச் சொன்னார்

அவர். தேரடியை அடைந்ததுமே அந்த ஆள் நடமாட்ட மற்றுப் போயிருந்த பாழடைந்த பகுதியில் கார் ஹெட், லைட் வெளிச்சத்திலேயே அவன் விழுந்து கிடப்பதை அவர்கள் பார்த்து விட்டார்கள். முதலுதவி செய்து உடனே

டி பிக்குக் கொண்டு வந்து சேர்த்து அப்புறம் டாக்டரையும் அழைத்து வந்து கவனித்திருந்தார்கள். அவன் குடித்திருந்: தது வேறு அவர்கள் கவலையை அதிகமாக்கியது.

'கவலைப்பட ஒன்றுமில்லை. ஆனால் இந்த உடல் நிலையில் இவர் குடிப்பது கூடாது. கண்டபடி சுற்றவும் கூடாது. பரிபூரணமான ஒய்வுதான் தேவை!' என்றார். L„f?“ á 5 L— sf" , .

அன்றிரவு பன்னிரண்டு மணிக்கு மேல் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து 'சாமீ! என்ன பண்ணுவீங்களே. எப்படிச் சொல்லிக் கூட்டிக்கிட்டு வருவீங்களோ என் மகன் ராஜ . வை உடனே நான் பார்க்கணும்’-என்று. சொல்லிவிட்டுச் சர்மாவிடம் சிறு குழந்தைபோல் விசும்பி, விசும்பி அழ ஆரம்பித்தான் திரு. . .

சர்மாவுக்கும், கன்னையனுக்கும் என்ன செய்வதென்று. புரியவில்லை. "அவருக்கு எந்தப் பெரிய ஏமாற்றத்தையும். அளிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்’’-என்று சென்னை யிலிருந்து கிளம்பியபோது சைக்கியாட்ரிஸ்ட் சொல்லி அனுப்பியிருந்தது அவர்களுக்கு நினைவுக்கு வந்தது.