பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 நா. பார்த்தசாரதி

'இப்பத் தூங்குங்கோ காலம்பர ஏற்பாடு பண்றேன். போர்க்க முடியல்லேன்னாலும் டிரங்க்கால் போட்டு உங்க மகனோட ஃபோன்ல நீங்க பேசறதுக்காவது ஏற்பாடு பண்றேன்'-என்றார் சர்மா.

"அவனுக்குத்தான் என் மேலே கோபமாச்சே! அவன் என்னோட ஃபோன்ல பேசச் சம்மதிப்பானா?' என்று .திரு உடனே பதிலுக்கு அவரைக் கேட்டான்.

‘'சிரமம்தான்! இருந்தாலும் நான் உங்களுக்காக வாதாடி அவனோட பேசலாம், இங்கே டி.பி யிலேயே ஃபோன் இருக்கு, அங்கே மெட்ராஸ்ல அவன் இல்லே. எங்கே இருக்கான்னு விசாரிச்சு ஏற்பாடு பண்றேன்' என்றார் சர்மா, - -

மகனோடு பேசலாம் என்ற'ஏற்பாடு திருவுக்கு ஆறுத லும் திருப்தியும் அளித்தன. அடுத்த நாள் காலையில் சர்மா சென்னையிலுள்ள சைக்கியாட்ரிஸ்ட்டுடன் பேசிக் கலந்தாலோசித்துத் திருவும் அவன் நீண்ட பல ஆண்டு களாக நேரில் சந்திக்காத அவனுடைய மகனும் போனில்

பேசிக் கொள்ள ஏற்பாடு செய்தார்.

மகன் தன்னோடு ஃபோனில் பேச இசைந்ததே திருவுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்தது.

'என்னை மன்னிச்சிடுப்பா! நான் இனிமே தப்பு எதுவும் பண்ண மாட்டேன். என்னை மாதிரி அரசியல் வாதிகளாலே அடுத்த தலைமுறையே கல்வி, உழைப்பு. ஒழுக்கம், நேர்மை, நியாயம் எல்லாத்திலேயும் நம்பிக்கை பற்றுச் சீரழிஞ்சு போச்சுங்கிறதை இப்ப நானே உணரு கிறேன்” என்று திரு பேச்சை ஆரம்பித்தான். மகன் ஆபதிலுக்கு அதிக நேரம் பேசவில்லை. -

"நீங்க திருந்திட்டிங்சங்கிறதை அறிஞ்சு எனக்கும் சந்தோஷம்தான் அப்பா இதே மாதிரித் தொடர்ந்து நீங்க