பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 நா. பார்த்தசாரதி

"டாக்டர் உண்மையைச் சொல்லக் கூடாதுங்கிற வரை இப்படியே நாடகம் நடத்திச் சமாளிச்சுக்க வேண் டியதுதான்.”

இந்த உரையாடல் அறைக்குள் இருந்த திருவுக்குத் தெளிவாகக் கேட்டது. -

அன்று பிற்பகல் சர்மாவும், கன்னையனும் மறுபடி திருவைப் பிரக்ஞை தவறிய நிலையில் கண்டு பதறிப் போனார்கள். உள்ளுர் டாக்டர் வந்து ஏதேதோ செய் தார் நடு நடுவே நினைவு வந்தபோதெல்லாம் ஐயோ! என் மகனை யாரும் கொல்லலே...அவன் தப்பிவிட்டான்... நான் அவனோடுதான் ஃபோனில் பேசினேன்?-என்று இரைந்து கத்திவிட்டு மறுபடி மறுபடி பிரக்ஞை தவறி மூர்ச்சையானான் திரு. அன்றிரவு நிலைமை மோசமா கியது. எழிலிருப்பு டாக்டர் திருவைச் சென்னைக்கே கொண்டு போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.

பின் காரிலேயே திருவைச் எபீட்டில் படுக்கவைத்து இரவோடிரவாகச் சென்னைக்குக் கொண்டு போனார்கள்.

சென்னையை அடையும்போது அதிகாலை நான் குமணி. ஆகிவிட்டது. - s -

மாடவீதி மருத்துவமனையில் அவன் தங்கியிருந்த அதே பழைய ஏ. சி. அறையில் மீண்டும் திரு அநுமதிக்கப் பட்டுப் படுத்துக் கிடந்தன், நினைவு வரும்போது, "ஐயோ, என் மகனை யாரும் கொல்லவில்லை. அவன் தப்பி விட்டான்' - என்று ஹிஸ்டீரியா வந்தவன் மாதிரி அலறுவதும் மறுபடி நினைவு தவறுவதுமாகவே நாட்கள் ஒடின், -

அவ்வப்போது சிறிது நோம் பிரக்ஞை வருவதும் போவதுமாக அவன் ஒரு முழுநேர மனநோயாளியா னான். கோமாவில் கழித்த நேரம் அதிகமாகவும் பிரக்