பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 19 ፰

ஞையில் கழியும் நேரம் குறைவாகவும் இருந்தன. அவன் சாக விரும்பினான். ஆனால் சாவும் வரவில்லை. வாழ்வும் நன்றாக இல்லை. நடைப் பிணமாக அவ்வளவு-கூட இல்லை-நடப்பது நின்று போய்ப் பல நாளாயிற்றுவாழ்ந்தான் அவன். -

நினைவு பிசகாமல் வரும் சில போதுகளிலும் எழி லிருப்பு டி. பி. யில் சர்மாவும் கன்னையனும் தங்களுக்குள் பேசிய உரையாடலை ஒட்டுக் கேட்ட ஞாபகம் வந்து உடம்பு பதறி நடுங்கும். -

தன் மகனைத் தானே கொன்றிருக்கிறோம் என்ற பயங்கர உண்மை நினைவு வந்து சித்திரவதை செய்யும். துப்புத் துலங்காததாலோ என்னவோ, போலிஸ் அவனைத் தேடி வந்து கைது செய்யவும் இல்லை. தான் படுத்த படுக்கையாகப் பைத்தியம் பிடித்துச் சித்தஸ்வா தீனமிழந்து அநுபவிக்கும் இந்தக் கொடுமை தனக்கு இயற்கையாகவே விரும்பி அளித்த தண்டனையோ என்று கூட அவனுக்கே பிரக்ஞையான வேளைகளில் தோன்றும் அவன் மனமே அவனைக் கைதியாக்கி வதைத்தது. நாளடைவில் டாக்டர், நர்ஸ், எல்லோரும் அவன் ஒரு தேறாத கேஸ் என்று கைவிட்டு விட்டாற் போன்ற நிலைக்கு அவனை ஒதுக்கினார்கள். அவன் சேர்த்து வைத்திருந்த சொத்தும், ரொக்கமும் வசதிகளுமே அவனை விரட்டி விடாமல் மருத்துவ மனையில் வைத்துத் தொடர்ந்து உபசரிக்க உதவின. பார்க்க வந்து கவனிக்க என்று அவனுக்கு உறவினர் யாருமில்லை. கன்னையன் கூட வேறு இடத்தில் வேலைக்குப் போய் விட்டான். சர்மா மட்டும் அவனைப் பிடிக்கா விட்டாலும் விசுவாசம் காரணமாகத் தொடர்ந்து வந்து அவனைக் கவனித்துக் கொண்டிருந்தார். - - - - -

எப்போதாவது நினைவு வரும்போது, தான் இப்படி - எல்லாம் சீரழியாமல் நேராக வாழ்ந்திருக்கலாமோ எனறு