பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4 நா. பார்த்தசாரதி

லேசாக ஒர் எண்ணம் திருவின் மன ஆழத்தில் மெல்லத் தலைக் காட்டும். எந்த மூலக்கனலிலிருந்து அவன் பல வெளிச்சங்களை அடைந்திருந்தானோ அந்த மூலக்கணல். இன்று அதன் ஊற்றுக் கண்ணிலேயே அவிந்து போயிருந் தது. மறுபடி அதை ஏற்றிச் சுடரச் செய்வதற்குரிய வயதும், வாழ்வும் சக்தயும் இனி அவனுக்கு இருக்கு மென்று தோன்றவில்லை.

நாட்கள், வாரங்கள், மாதங்கள் என்று காலம் ஓடியது. சாகவும் முடியாமல், வாழவும் முடியாமல் திரு படுக்கையில் கிடந்தான். அவன் ஒருவன் உயிரோடிருப்பது نت لتقيق 5 لاة سنة கும்--ஏன்-சமயாசமயங்களில் அவனுக்குமே கூட மறந்து போயிற்று. -

வீழ்த்தப்பட்டதன் காரணமாகவே சழுந்திருக்க வேண்டும் என்றும் ஒடுக்கப்பட்டதன் காான டாகவே உயரவேண்டும் என்றும் நாற்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு பின்னிரவின் கருக்கிருட்டில் எழிலிருப்பின் ; ; ; 母。 மண்ணில் தோன்றிய அந்த வாழ்க்கை வைராக்கியங்கள் இன்று அவனுள் முற்றிலும் அவிந்து வற்றி அடங்கிப் போயிருந்தது.

"ஊரவர் கூடி உற்சவம் எடுத்துப் பேரினை வளர்த் துப் புகழினை பெருக்கி அவனுள் அன்று கிளர்ந்து முண்ட, அந்த மூலக்கனலை அவித்திருந்தார்கள். புகழும பதவி களும். அளவற்வ பணமும், அவனைப் பண்பற்றவனாக்கி முடித்திருந்தன. .

தன்னையும் தன்னை ஒத்த அரசியல்வாதிகளையும் பற்றி நினைத்தபோது தாங்கள் தண்டனைக்குரியவர்கள் என்று அவனுக்கே இப்போது தோன்றியது. ஊருணி, நீரில் நஞ்சு கலப்பதைப் போலவும், ஊர்நடுவில் நச்சுச் செடி பயிரிடுவதைப் போலவும் தாங்கள் சமூக வாழ்வை சீரழித்திருப்பதாகத் தோன்றியது. நோக்கமும், திட்டமும்,