பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 நா. பார்த்தசாரதி

'அம்மாளு நீ இங்கேயே இரு மறுபடியும் இந்த ஆளுக்கு நினைவு தப்பிப் போச்சு...அவசரமா டாக்டரைக் கூட்டிக்கிட்டு வரணும் ...நான் போகிறேன்'-என்று நர்ஸ் அப்போது பதறிய பதற்றம் அதளபாதாளத்தில் இருப்பவனுக்குக் கேட்பது போல் மங்கலாகத் திருவுக்கும் கேட்டது. - - .

நினைவு இருக்கிற நேரங்களைவிட, நினைவு தப்பு கிற நேரங்களே சமாதி நிலையின் சுகத்தைத் தனக்கு அளிப்பது போல் அவன் சமீபத்தில் பல முறை எண்ணி எண்ணி மகிழ்ந்திருக்கிறான். இப்போதும் அந்த சுகமான மகிழ்ச்சியில்தான் அவன் மூழ்கியிருக்கக் கூடும் அந்த ஒரு மகிழ்ச்சியாவது இனி அவனுக்குக் கிடைக்கட்டுமே,

பாவம்!

o