பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 நா. பார்த்தசாரதி

மும், வைரமுமாய் மின்னும் மகாராணியான அவன் தாய், அவர்கள் கும்பிடும் அநுமார், பெருமாள், அர்ச்சகர், புரோகிதர் அனைவருமே எதிரிகளாக அவன் கண்ணுக்குத் தோன்றினார்கள். கோவில், குளம், தர்மம், நியாயம், மரியாதைகள், பழக்க வழக்கங்கள், பண்டிகை, திருவிழாக் கள் எல்லாமே தன் போன்ற அநாதைகளை எப்போதுமாக ஒடுக்கி வைக்க ஏற்பட்ட நிரந்தரச் சதி திட்டங்களாக அந்த விநாடியில் அவனுக்குத் தோன்றின. l அந்த ஆண்டின் பிள்ளையார் சதுர்த்தி தினத்தன்று நந்தவனத்துக்குள்ளிருந்த 'பூங்காவன விநாயகர் கோவி வில் பண்டாரம் பொங்கல் படையல் எல்லாம் செய்த போது-சண்பகம், பண்டாரத்தின் ம ைன வி, மகன் எல்லோருமே விழுந்து கும்பிட்டுத் திருநீறு வாங்கிப் பூசிக் கொண்டார்கள். திருமலை மட்டும் கும்பிட்டு விழவு மில்லை, திருநீறு வாங்கிப் பூசிக் கொள்ளவுமில்லை.

'தப்பா நெனைச்சுக்காதீங்க...இதெல்லாம் எனக்குப் பிடிக்கலே...இந்த வழக்கத்தை நான் விட்டாச்சு...இந்த ஜமீன் உப்பைத் தின்னு தின்னு இங்கே கிடக்கிற சாமி, பூதங்களும், நல்லது கெட்டது தெரியாமல் புத்தி கெட்டுத் தடுமாறிப் போச்சு. -- -

பண்டாரம் அவனை வற்புறுத்தவில்லை. சண்பகம், அவனை விநோதமாகப் பார்த்தாள். பண்டாரத்தின் மனைவி அவனை அருவருப்பாக நோக்கினாள். பண்டாரத் தின் மகன் அவனைக் கேட்டான்: -

"என்ன? நீங்களும், நம்மூர் மருந்துக்கடை அண்ண னோடச் சேர்ந்தாச்சா?’’ -

'இதுவரை இல்லை! ஆனால் அந்த அண்ணனைச் சிக்கிரமே பார்ப்பேன் என்று தோன்றுகிறது' என்றான் திருமலை. வெளிப்பட்டணத்தில் இங்கர்சால் மருந்தகம்’ என்ற பெயரில், மருந்துக்கடை வைத்திருந்த பொன்னுச் சாமி என்பவர் 'கடவுள், மதம் என்பதெல்லாம் ஏமாற்று வேலை. அறிவும், சிந்தனையுமே மனிதனின் உயர் ஆற்றல்கள்’ என்று பேசி வந்தார். ஊரில் மிருந்துக்கடை