பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 21.

அண்ணன் என்று அவருக்குப் பேர் ஏற்பட்டு வழங்கி வந்தது. அவரைக் குறிப்பிட்டுத்தான் பண்டாரத்தின் மகன் திருமலையை விசாரித்திருந்தான். -

பிள்ளையார் சதுர்த்தி கழிந்த இரண்டு மூன்று தினங் களில் திருமலை கூறிய இன்னொரு செய்தி பண்டாரத் தையும் அவர் குடும்பத்தாரையும், ஆச்சர்யத்துக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது.

'தேரடியிலே இளநீர்க் கடை போடப் போறேன். இளநீர் மட்டுமில்லே... தேங்காய். பழம், பூ, கற்பூரம், ஊதுபத்தி, வெற்றிலைப் பாக்கு எல்லாம்தான் விற்கிற தாய் உத்தேசம்...” - -

'சாமி பூதம் இல்லேங்கறே. அதுமார் கோவிலுக்கும் பெருமாள் கோவிலுக்கும் போற சனங்க உன்னை நம்பிக் கடைக்குப் பண்டம் வாங்க வரணுமே தம்பீ? அது எப்படி..?’’ -

'எனக்குச் சாமி பூதத்துலே நம்பிக்கை இல்லே! ஏமாத்தாமே, கொள்ளை விலை வைக்காமே நியாயமா நான் தேங்காய் பழம் வித்தா வாங்கறவங்க வாங்கட்டும்... பிடிக்காதவங்க போகட்டும்..."- . .

  • உள் பட்டணத்து ஆளுங்க கெடுதல் பண்ண மாட் டாங்களா தம்பீ!’ - - . "யாருடைய கெடுதலுக்கும் நான் பயப்படலே! என்னை எவனும் அசைக்க முடியாது.'

3

அந்த ஊரும், ஊர் மக்களும் மேலானவையாகவும், மேலானவர்களாகவும் மதித்த எல்லாவற்றையும், எல்லோ, ரையும் தான் கீழானவையாகவும், கீழானவர்களாகவும் கருதித் துணிந்து எதிர்க்கப் போகிறோம், விரோதித்துக் கொள்ளப் போகிறோம். என்ற உணர்வே கள்குடித்து

மு-2