பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 23 தேரடியில் கடை போடுவதற்கு முன் திருமலை தானே பொன்னுசாமியைப் போய்ச் சந்தித்து எல்லா விவரமும் சொன்னான். உள்பட்டனத்துவாசிகள் அடியாட்கள் மூலம் தன்னைப் பழி வாங்கியதையும், பண்டாரம் தன்னைத் துரக்கிப்போய்ப் பலமாதங்கள் தலைமறைவாக வைத்துக் காப்பாற்றியதையும் கூடச் சொன்னான். எல்லாவற்றை யும் பொறுமையாகக் கேட்டுவிட்டு, "பயப்படாதீங்க தம்பி! தனி மனிதனை அவசியமற்ற பயங்களிலிருந்து விடுவிப் பது தான் எங்க சுயமரியாதை இயக்கத்தின் தலையாய கடமை! எங்களைத் தேடி வந்திருக்கீங்க... இனிமேக் கவலையை விடுங்க... -என்றார் பொன்னுச்சாமி. அந்த ஆதரவும், அரவணைப்புமே அவனை அவர்களோடு சேர்த்தன. மிகவும் இளைஞனான தன்னைக் கூட அவர் மரியாதைப் பன்மை கொடுத்துப் பேசியது திருமலையைக் கவர்ந்தது.

'நீங்க வந்து கடையைத் தொடங்கி வைக்கணும்'.

கண்டிப்பா வாரேன் தம்பீ!' வாக்குக் கொடுத்தபடி தம் ஆட்களோடு வந்து பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்து ஒரே ஓர் இளநீர் மட்டும் வாங்கிக் குடித்து வியாபாரத்தை ஆரம்பித்து வைத்திருந், தார் பொன்னுச்சாமி. அவரும் அவரது ஆட்களும் வந்தி ருந்து கடையைத் தொடங்கியதால் திருமலைக்கு உட னேயோ, சில நாட்கள் கழித்தோ, உபுத்திரவங்கள் செய்ய வேண்டுமென்று நினைத்துக் காத்திருந்த உள்பட டணத்துக் கைக்கூலிகளுக்கு எச்சரிக்கை போல் அமைந்து விட்டது. திருமலையின் மேல் கைவைத்தால் பொன்னுச் சாமி வகையறாவின் விரோதத்தை உடனே விலைக்கு வாங்கவேண்டி நேரிடும் என்பது எல்லோருக்கும் அவனைப் பற்றிய ஒரு.ஜாக்கிரதை உணர்வைத் தோற்று விக் திருந்தது. -

ஜமீன் பெரிய உடையார் காலமான பின் ஏழெட்டு மாதக் காலம் உள்பட்டணத்தில் அவன் சோதனைக்ளை

அநுபவித்தான். கடைசியில் அவனுக்கும்சின்னிக்கிருஷ்ண