பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 - நா. பார்த்தசாரதி

னுக்கும் மோதல் வந்து இரவோடிரவாகக் கடத்தி வந்து அவனை அடித்துப் போட்டார்கள். தொடர்ந்து பல மாதங் கள் பண்டாரத்தின் நந்தவனம் அவனுக்குப் புகலிடம் அளித்திருந்தது. தொடர்ந்து உயிர் வாழ வேண்டுமானால் அவன் ஊரைவிட்டு வெளியேறி விடுவதுதான் நல்லது றுை பண்டாரம் அறிவுரை கூறினார். அதை அவன் ஏற்கவில்லை. விரக்தியும், ஆத்திரமும் கலந்த ஒரு வகை முரட்டுத்தனத்தை அந்த நந்தவனத்து அஞ்ஞாத வாசம் அவனுள் மூட்டிவிட்டிருந்தது. பொன்னுச்சாமியும்,அவரது சுயமாரியாதை இயக்கமும் அவனது இந்த முரட்டுத்தைரி யத்தை ஒரு மதம்ாகவே ஏற்று அங்கீகரித்து அரவணைக் கத் தயாரயிருந்தது நல்லதாயிற்று. அவனுள் முறுகிவெறி யேறியிருந்த பழிவாங்கும் உணர்ச்சிக்கு நாகரிகக் கலப் பற்ற ஒரு முரட்டு வீரம் உரமாகத் தேவைப்பட்டது. நாசூக்கோ, மென்மையோ, இல்லாத அத்தகைய முரடடு அஞ்சாமையை அடையப் பொன்னுச்சாமி அவனுக்கு உதவின்ார்.

தேரோட்டத்துக்கு முதல் வடம் பிடிக்கவோ, அநுமா ருக்கு மாவிளக்குப் போடவோ ஜமீன் குடும்பத்தினர் வெளிப்பட்டணத்துக்கு வந்தால், பண்டாரமும் மற்றவர் களும் இடுப்பில் மேல் வேஷ்டியைக் கட்டிக்கொண்டு அவர்களை விழுந்துவனங்கத் தயாராயிருந்த அதே சமயத்தில், 'வடம்பிடிக்கும் உடையாரே! கடன் அடைக்க வழி உண்டா? -என்றும், 'அரைவேளைச் சோற்றுக்கு வழியில்லை-திருநாளைக் கொண்டாடிப் பயன் என்ன? . என்றும் பெரிது பெரிதாகத் தேரடி மண்டபத்தின் சுவரில் எழுதும் அளவுக்குப் பொன்னுச்சாமியும் அவரது ஆட்களும் துணிந்து தங்கள் எதிரிப்பு உணர்வைக் காட்டினார்கள்.

நாடு சுதந்திரம் அடைந்து விட்டால் கதர், காந்தி, காங்கிரஸ் எல்லாம்தான் இனி முன்னணியில் இருக்கும் என்று கெட்டிக்காரத்தனமாக முன்கூட்டியே அனுமானித்து உள்பட்டணவாசிகள் கதர் கட்ட ஆரம்பித்தனர். அவசர