பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 安城5

அவசரமாகச் சுதேசி உணர்வைப் போற்ற ஆரம்பித்தனர். அரண்மனைச் சுவர்களில் திலகர், காந்தி படங்கள் இடம் பெறலாயின. வசதியுள்ளவர்களும் செல்வந்தர்களும் நாளைக்குச் செல்வாக்குப் பெறப் போகிறவர்களை இன்றே முந்திக்கொண்டு ஆதரிக்கும் இயல்பான முன் ஜாக்கிரதை உள்ளவர்கள் என்பதை எழிலிருப்பு ஜமீனும் நிரூபித்தது. இப்போது உன்பட்டனத்தின் போக்கிற்கு எதிரான போக்குள்ள அணி எதுவோ அதில் இருந்தே ஆக வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் திருமலைக்கு இருந்தது. எனவே அவன் சுயமரியாதை இயக்கம் ஜஸ்டிஸ் கட்சி என்று பொன்னுசாமியின் போக்கிலேயே தா னும் தொடர்ந்து செல்ல வேண்டியிருந்தது. அதே பாதையில் மேலும் சென்றான் அவன் . பூரணச் சுதத்திரக் கோரிக் கையை காங்கிரஸ்ாம் பாகிஸ்தான் கோரிக்கையை முஸ்லிம் லீக்கும் முன்வைத்துப் போராடிக் கொண்டிருந்த போது பொன்னுசாமி வகையறாவினர், X'மைசூர், கொச்சி திருவிதாங்கூர், ஹைதராபாத் ஆகிய சமஸ்தானங்களைத் தவிர எஞ்சிய ஆந்திர, கேரள, கன்னட, தமிழ்ப்பகுதிகளடங்கிய தென்னாட்டைத் திராவிட நாடாகத் தனியே பிரித்துத் தொடர்ந்து பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருப்பதற்குத் தீர்மானம் நிறைவேற்றினர். -

திராவிடர்களுடைய கலை, நாகரிகம், பண்பாடு, பொருளாதாரம் ஆகியவை முன்னேற்றமடைய இது உதவும் என்று தென்னிந்திய நலவுரிமைச் சங்கமாக இருந்த நீதிக் கட்சி தீர்மானம் கொண்டு வந்த 15-வது மாநில மகா நாட்டுக்குப் பொன்னுச்சாமியோடும் மற்ற ஊர் ஆட்களோடும் தானும் போய் வந்தான் திருமலை, -

அவனுடைய போக்கைப் பார்த்துப் பயந்த பண்டாரம் மெல்ல ஒதுங்கி விட்டார். ஆனாலும் தன்னைக் காப்பற்றி யவர் என்ற முறையில் திருமலைக்குப் பண்டாரத்தின்