பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: 8 - நா. பார்த்தசாரதி'

"'என்ன இருந்தாலும் இது உங்க குடும்ப விவகாரம்: தான் வந்து தலையிடறது நல்லா இருக்குமா? உங்க ஐயா அதை எப்பிடி எடுத்துக்குவாரோ?' -

'எப்பிடித் தலையிடறது யார் தலையிடறதுன்னு: எனக்கொண்ணும் புரியலே...வெக்கத்தை விட்டு உங்க ளைத் தேடி வந்ததுக்குக் காரணம் நீங்க எதினாச்சும் பண்ணித் தடுக்க முடியும்னுதான்...' -

அதெல்லாம் சரிதான் சண்பகம்! ஏற்கெனவே எம். பேருலே பண்டசாத்துக்கு நல்லபிப்ராயமில்லே. இதை வேற நான் தேடிப் போய்ச் சொன்னா என்னைப் பத்தித் தாறு மாறா நெனைக்க மாட்டாரா?”

'ஐயா உடம்புக்குச் சுகமில்லாமப் படுத்து ரெண்டு வாரமாச்சு...அதைப் பார்த்து விசாரிக்க வந்த மாதிரி வாங்க... தோதுப்பட்டால் அந்த விஷயத்தைப் பேசுங்க... இல்லாட்டி சும்மா விசாரிச்சுட்டுத் திரும்பிடுங்க.’’

‘'நீ சொல்றபடியே செய்யலாம். கடையை அடைச்சுப் போட்டு நந்தவனத்துப் பக்கம் வரேன். உங்கப்பா கிட்டப் பேசாமலியே இதைத் தடுக்கமுடியுமான்னும் நான் யோசிக் கிறேன் சண்பகம்...”

அவள் தயங்கித் தயங்கி நின்று விட்டுப் புறப்பட்டுப் போனாள். போகும்போது கண் கலங்கியிருந்தது தெரிந்: தது. இன்னும் சிறிது நேசம் இருந்தால் அழுதுகூட இருப் பகள். வெளிப் பட்டணத்திலிருந்து ஐந்தாறு மைல் தொலைவிலிருந்த மீறவநத்தம் கிராமத்தில் மற்றொரு பண்டாரத்தின் குடும்பம் இருந்தது. அந்தக் குடும்பத்துப் பையன் ஒருவனுக்குச் சண்பகத்தைக் கட்டிக் கொடுப்ப, தென்று முத்துப்பண்டாரம் ஏற்பாடு செய்கிறாராம். பையன் குடிகாரன், பல பெண்களோடு தொடர்புள்ள விடலை என்றெல்லாம் கேள்விப்பட்டுச் சண்பகம் பதறி னாள். அவளுக்கு அந்த இடம் பிடிக்கவில்லை. அம்மாவை, விட்டு முத்துப் பண்டாரத்திடம் மறுத்துப் பார்த்தாள். 'கலியாணத்துக்கு முந்தி எல்லாப் பயல்களும் அப்படித்