பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

) நா. பர்ர்த்தசாரதி

தில் தனக்கு எதுவும் இல்லை என்பதுபோல் திருமலை நடிக்கத்தான் நடித்திருந்தான். அவனுக்கு இதில் என்ன இருக்கிறது, எப்படி இருக்கிறது என்பதை அந்தரங்க மாகப் புரியவைக்க விரும்பியவளைப் போல்தான் சண்பகம் அவனைத் தேடி வந்து வெட்கத்தை வி ட் டு இதைச் சொல்லியிருந்தாள். அவனோ ரொம்பவும் பெரிய மனிதத் தனமாக ஒன்றுமே தெரியாதவனைப் பேர்ல், இது உங்க குடும்ப விவகாரம் நான் எப்படித் தலையிட முடியும்?" என்று பதில் பேசியிருந்தான். தான் அவளை ஏமாற்று கிறோம் என்று புரிந்து கொண்டே ஏமாற்றியிருந்தான். தனது உடம்பிலும் மனத்திலும் எண்ணற்ற அவமானப் புண்களைத் தாங்கிக் கொண்டு நந்தவனத்திற்குள் அவன் . தலித்து கிடந்த காலங்களில் சண்பகத்தின் புன்னகையும் பார்வையுமே அவனை ஆற்றிக் குணப்படுத்தியிருந்தது. ஒரு புருஷனுக்கு அவனுடைய மனைவி செய்ய முடிந்ததை விடவும் அதிக சிரத்தையோடு, அவள் அவனை உபசரித் திருந்தாள். பிரியத்தில் நனைந்து மூழ்கச் செய்திருந்தாள்.

இப்போது அவள் திருப்திக்காகவும், தன் திருப்திக் காகவும் அவளை இழுத்துக்கொண்டு ஓடிப்போய் விடலாம் தான். கதையில் பிருதிவிராஜ் சம்யுக்தையைக் கடத்திக் கொண்டு போனதை வியக்கும் ஒரு தேசத்தில் தகப்பன் பெயர் தெரியாதவன் என்று ஊரார் இழிவாகப் பேசும் திருமலைராஜன் பண்டாரத்தின் மகள் சண்பகத்தைக் கடத்திப் போவதை அத்தனை தூரம் வியந்து கொண்டாடி விட மாட்டார்கள். திட்டுவார்கள். தூற்றுவார்கள், ஆனா லும் அவன் ஒரு கோழையைப் போல அவளைக் கடத்திச் செல்ல முயலப் போவதில்லை. எவ்வளவு பெரிய காரியத் தைச் செய்தாலும் அதை அந்த ஊரிலே அதே தேரடி யிலிருந்து கொண்டே பகிரங்கமாகத் தன் விரோதிகளும் , அறியும்படியாகவே செய்ய விரும்பினான் திருமலை. *ஒரு சுயமரியாதைக் காரனின் முதல் எதிரி பயம். இரண்