பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 - நா. பார்த்தசாரதி

அவர் கூறிய வார்த்தையைக் காப்பாற்றி விட்டார். என்ன செய்தாரோ, மறவ நத்தத்துப் பையனுடன் சண்ம கத்தின் திரும்ணம் கலைந்து போயிற்று. அதே அதிர்ச்சி யில் இரண்டு மாதத்தில் முத்துப் பண்டாரம் காலமானார்.

முத்துப் பண்டாரம் காலமான ஓரிரு மாதங்களில் அவர் மனைவியும் காலமானாள். சண்பகம் அநாதை LL、勒 。

9 ரு சில மாதங்களில் எழிலிருப்புக்காரர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் மற்றொரு காரியத்தையும் திருமலை. துணிந்து செய்வதற்கு முன் வந்தான். அதற்கும். பொன்னுச்சாமி அண்ணன்தான் துணை நின்றார்.

5

திருமலைக்கும், சண்பகத்துக்கும் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. அந்த ஊர் எல்லையில் முகூர்த்தநாள், நல்லநேரம் எல்லாவற்றையும் புறக் கணித்து அசல் இராகுகாலத்தில் நடைபெற்ற முதல் சுய மரியாதைத் திருமணமே அதுதான். திருமலை அதற்கு இணங்கியதைப் பற்றி யாரும் வியப்படையவில்லை. பக்தி சிரத்தை மிக்கவளாக வளர்ந்த பண்டாரத்தின் மகள் சண்பகம் நாள் நட்சத்திரம், நல்ல நேரம், தாலி, எல்லா வற்றையும் கைவிடத்துணிந்து அந்தத் திருமணத்துக்குச் சம்மதித்ததுதான் எல்லோருக்கும் பெரிய ஆச்சரியமா யிருந்தது. என்ன ஆனாலும் திருமலையையே மணப்பது என்று காத்திருந்த அவள் உறுதியும், பிடிவாதமும் அதில் தெரிந்தன. அது ஒரு கலப்புத் திருமணம். பொன்னுச் சாமியும், மற்றவர்களும் அரும்பாடுபட்டு ஈரோட்டிலிருந்து ஐயாவையே அழைத்து வந்து தலைமை வகிக்கச் செய்து அந்தத் திருமணத்தை நடத்தியிருந்தனர். சண்பகத்தின் சகோதரன் திருமணத்திற்கே வரவில்லை. திருமலை மட் டும் பழைய அநாதைத் திருமலையாயிருந்திருந்தால் உள்.