பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கணம் 36

பட்டணத்துப் பெரும்புள்ளிகள் அடியாட்கள் வைத்துக் கல்யாணத்தை நடக்க விடாமல் தடுத்திருப்பார்கள். வெறும் பயல் என்று அவர்கள் எண்ணிய திருமலைராஜ னுக்குப் பின்னால் இன்று வலுவான அரசியல் சமூக சீர் திருத்த சக்திகள் இருந்ததால் உள்பட்டணத்துப் பெரும் புள்ளிகளும், வெளிப்பட்டணத்து மடிசஞ்சிகளும் அந்த சு. ம. -கல்யாணத்தைக் கண்டு கொள்ளாதது போல் ஒதுங்கி விட்டனர்.

"கலி முத்திப் போச்சு! இல்லாட்டி இப்பிடியெல்லாம் நடக்குமா?’ என்ற வம்புப் பேச்சோடு ஊரார் தங்கள் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் நிறுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று. எந்தப் புதிய மாறுதலையும் ஆயிரம் சந்தேகங்களுடனும் பதினாயிரம் பயங்களுடனும் பார்க்கக் கூடிய அந்தப் பழமையான ஊருக்குத் திருமலை தன்னு டைய திருமணத்தின் மூலம் போதுமான அதிர்ச்சியை அளித்திருந்தான் என்றுதான் சொல்ல வேண்டும்.

"ஆனாலும் நீங்க ரொம்ப மோசம்! தாலிகூட இல்லாம ஒரு கல்யாணமா? உங்களுக்காகத்தான் இந்தக் கூத்துக்கெல்லாம் சம்மதிச்சேன்'-என்று சண்பகம், தனியே அவனிடம் சிணுங்கியதோடு தன் மெல்லிய எதிர்ப்பை நிறுத்திக் கொண்டாள். அதற்கு மேல். பகிரங்கமாக எதையும் அவளால் எதிர்க்க முடியாது; எதிர்க்கவும் அவள் விரும்பவில்லை. கணவன்ே கண் கண்ட தெய்வம்'- என்ற பழைய கொள்கைப்படி பார்த் தாலும் கூடத் திருமலை எந்தப் பாதையைக் காட்டு கிறானோ அந்தப் பாதையில் செல்ல வேண்டியது அவள் கடமையாயிருந்தது. ஊர் நிலைமையை உத்தேசித்து இவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகத் தாம் குடியிருந்த மறவர் சாவடி வீதியிலேயே ஒரு வீடு பார்த்துக் கொடுத்திருந்தார் பொன்னுச்சாமி. புதுமைகளையும் வழக்கத்துக்கு மாறான காரியங்களையும் சந்தேகத்தோடு மட்டுமன்றிக் கோபத்தோடும் பார்க்கிற ஒரு பழைய