பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கணல் . . 39.

அண்ணன் என்று உரி மையோ டு ம் மதிப்போடும் இப்போது அழைக்க ஆரம்பித்திருந்தார்கள். புகழும் வருமானமும் போதுமான ஆணவத்தையும் கர்வத்தையும் அவனுக்கு அளித்திருந்தன. நெஞ்சை நிமிர்த்திப் பேசுகிற குணம் வந்தது. தன்னால் எதுவும் செய்யமுடியும் என்ற முரட்டு நம்பிக்கையும் அடாவடித்தனமும் கூடவே வந்தன. கூட்டங்களில் பேச நிபந்தனை போட ஆரம்பித் தான் அவன். எல்லாப் பேச்சாளர்களும் பேசிய பின்பு கடைசியாக முத்தாய்ப்புப் பேச்சாகத் தன்னுடைய பேச்சே இருக்கவேண்டும் என்று வற்புறுத்தினான். கூட்டத்திற் காக விளம்பரங்கள் செய்யும் போது சிறப்புப் பேச்சாளர், சீர்திருத்தச் சிங்கம்-பகுத்தறிவுப் பகலவன் திருமலை என்று தன் ப்ெயருக்கு முன் அடைமொழிகளோடு முக்கி யத்துவம் தந்து விளம்பரம் செய்யவேண்டும் என்பதை வற்புறுத்தினான். தான் பேசுவதைக் கேட்க இரவு எவ்வ விவு நேரமானாலும் மக்கள் கலையாமல் உட்கார்ந்திருப் பதையும் கை தட்டுவதையும் கண்டு தன்னிடம் ஏதோ ஒரு வசீகர சக்தி இருப்பதாக அவனே எண்ணத் தொடங். கினான். 'தனக்கு எல்லாமே தெரியும்’ என்று பாமரர்கள் நம்பியதைத் தானும் நம்ப ஆரம்பித்தான். வெறும் அரைக் கைச் சட்டையும் நாலு முழம் கைத்தறி வேட்டியும் கட்டிக் கொண்டு அறிவியக்கத்தின் ஏழைத் தொண்டர்களில் நானும் ஒருவன்’ என்று விநயமாகச் சொல்லிக் கொண் டிருந்தவன். தோளில் நீளமாகத் துண்டு போட ஆரம்பித் தான். பெட்டிக்கடைகளின் பக்கம் அவன் போவது குறைந் தது. எனினும் விற்று முதல் லாபம் வீடு தேடி வந்தது. அவன் பெயரை வைத்து ஆட்கள் கடைகளை நடத்தினார் கள். திருமணங்களுக்குத் தலைமை, மகாநாடுகள், சிறப் புக் கூட்டங்கள். போராட்டம், மறியல், ஊர்வலம் என்று அவன் அலய ஆரம்பித்தான். சதாகாலமும் அண்ணன், அண்ணன் என்று நாலைந்து தம்பிகள் அவன் கூடவே சுற்றினர். வேடிக்கை என்னவென்றால் அவனைவிடி