பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் - 41.

  1. ಣ போலவே அவனைச் சிறைக்குள்ளே கொண்டுபோய்த் தள்ளிவிட்டது. -

6

உடில் நலிந்து படுத்தபடுக்கையாயிருந்த பொன்னுச் சாமி அண்ணனைச் சந்தித்துத் திருமலை தாங்கள் நடத்த இருந்த அந்தப் போராட்டம் சம்பந்தமாக யோசனை கேட்ட போது அவர் அதற்கு அவ்வளவு உற்சாகமாக வரி வேற்று மறுமொழி கூறவில்லை.

  • தம்பீ! எதுக்கும் கொஞ்சம் நிதானமாப் போங்க "எதையும் நம்பாதே, நம்பாதே’ன்னு சொல்லிச் சொல்லி ஜனங்க நம்மையே நம்பாமப் போயிட்டாங்க அடாவடித் தனமா இந்த மாதிரி எல்லாம் போராட்டம் நடத்தினா இயக்கத்தேர்ட பேரு கெட்டுப் போகும். அவசரப்படாதீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க.

அங்கே எழிலிருப்பு ஊரில் உள்பட்டினத்துக்கும், வெளிப்பட்டணத்துக்கும் நடுவே தாமரைக் குளத்தின் கரையில் ஒரு பழங்காலத்து அரசமரமும், அதனடியில் பிள்ளையில், நாகர் சிலைகளும் இருந்தன. திருமணமான பெண்களில் மக்கட்பேறு இல்லாதவர்கள் வெள்ளிக்கிழமை களில் அந்த அரச மரத்தைச் சுற்றி வந்தார்கள். நேர்ந்து கொண்டவர்கள், மரத்தில் சிறுசிறு தொட்டில்களோடு குழந்தைப் பொம்மைளைக் கட்டித் தொங்க விட்டார்கள்இந்த மூடப் பழக்க வழக்கங்களை எதிர்த்து அரசமரத்தடி யில் மறியல் செய்ய வேண்டும் என்றான் திருமலை. அவனை ஒத்த சில இயக்க இளைஞர்களும் அதை வர வேற்றனர். * , - -

பொன்னுச்சாமிக்கு அவனுடைய இந்தத்திட்டம் பிடிக் கவில்லை. படுத்த படுக்கையான பின் அவருடைய பல பிடி வாதங்களில் தளர்ச்சி வந்திருந்தது. அவர் உடல்நலம் தேறி எழுந்திருக்க வேண்டுமென்று அவருடைய மனைவி