பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 45

தாங்கள் சிறைவாசம் முடிந்து மீண்டதும் திருமலையும் மற்றவர்களும் அண்ணனைப் போய்ப் பார்த்து அவரது உடல் நிலையைப் பற்றிக் கூடப் பொருட்படுத்தாமல் இதை எல்லாம் விசாரித்த போதும் கூட, 'இந்தா திரு! நான் முதல்லியே இந்த அரசமர மறியல் போராட்டம் கூடாதுன்னேன். யாராயிருந்தாலும் எந்தச் சூழ் நிலை யிலும் நம்ம சமூகத்திலே திருமணமான பெண்கள் மரி « பாதைக்குரியவர்கள்! அவங்க முன்னாடிப்போயி, "அரச மரத்தை நம்பாதே ஆம்பிளையை நம்பு'-ன்னு வல்கசா டே சிக்கிட்டு நீங்க நின்னது சரியில்லை. அதான் நான் உங்களுக்காக வழக்காடவோ, விடுவிக்கவோ, வரவேற். கவோ எந்த ஸ்டெப்பும் எடுக்கலே' - என்று நிதானமாக வும், கறாராகவும் பதில் சொல்லி விட்டார் பொன்னுச்சாமி

  • வரவர உங்க போக்கு நல்லா இல்லே அண்ணே! அண்ணி வெட்டுடையனர் கோவிலுக்குக் கூட இரகசிய மாகப் போய் வந்தாங்கன்னு கேள்விப்பட்டோம்’

"இந்த இயக்கத்திலே நான் சேர்ந்த நாளிலிருந்து என் மனைவி என் கொள்கைகளை ஒப்பவில்லை என்பதும், அப்படி ஒப்பாமலிருக்க நான் அவளுக்குச் சுதந்திரமளித் திருப்பதும் ஊரறிந்த உண்மையாச்சே தம்பீ'

உள்ளூர் அநுமாரையும், பெருமாளையும் விட்டுப் போட்டு அண்ணி வெட்டுடையார் கோயிலைத் தேடிப் போனது மத்தவங்களுக்குத் தெரியக் கூடாதுன்னு தானே?” - - * -

  • அப்படி நீயாகக் கற்பனைப் பண்ணிக்கிட வேண் டியது தான். அது அவ பிறந்த வீட்டாருக்குக் குலதெய் வம்னு அவ போயிட்டு வந்திருக்கா, பெண்களுக்கு முழு சுதந்திரம் தரணும் அவர்களைத் தொழுவத்து மாடுங்க மாதிரி அடிமைப்படுத்தப்படா துங்கிறதுதான் ஐயாவோடி கொள்கை. அதை நான் அப்படியே கடைப்பிடிக்கிறேன்.'