பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 நா. பார்த்தசாரதி

எது எப்படியோ, மத்தவங்க காண அண்ணன் எங்களை விட்டுக் கொடுத்து, ரொம்ப அவமானப்படுத்திட் டீங்க...ஜெயில்லேருந்து வெளியே வந்தப்பக்கூட வாங். கன்னு கூப்பிட நாதியில்லாமே வெளியே வந்தோம். நாங்க...”

' வரவேற்கிற மாதிரிக் காரியத்தைப் பண்ணிட்டு நீங்க ஜெயிலுக்குப் போயிருந்தீங்கன்ன்ா டாக்டர் அட்வை லைக் கூடப் பொருட்படுத்தாம நானே எந்திரிச்சுக் கையிலே மாலையோடப் பெரிய கூட்டத்தைக் கூட்டிக் கிட்டு வரவேற்க வந்திருப்பேன்."

'வரவேற்க முடியாதபடி அப்பிடி என்ன மோசமான காரியத்தை நாங்கப் பண்ணிப்பிட்டோம் அண்ணே?’’

  • ஊரான் வீட்டுப் பொம்பளைகளை நடுத் தெருவிலே வழிமறிக்கிறதை விடக் கேவலமான காரியம் வேறொண் ணும் இருக்க முடியாது." - -

"இதிலே நான் அண்ணனோட கருத்து வேறுபடு வேன். '

இதன் பிறகு அவனுக்கும், பொன்னுச்சாமி அண்ண னுக்கும் பெரிய பிளவு ஏற்பட்டது. அவர் பொது வாழ்வி லிருந்து அறவே ஒதுங்கி ஒடுங்கிவிட்டார். சண்பகத்திடம் இந்தக் கருத்து வேறுபாட்டைக் கூறியபோது கூட அவள் பொன்னுச்சாமி அண்ணன் சொல்லியதுதான் சரி என் றாள். 'அரசமரத்தைச் சுத்தறது அறிவீனம்னு நீங்க கூட்டம் போட்டுப் பேசலாம்! அதை விரும்பறவங்க வந்து கேட்டுத் திருந்தலாம் திருந்தாமச் சும்மா கேட்டுச் சிரிச் சுட்டுப் போகலாம். ஆனா அரசமரத்தைச் சுத்திட்டிருக்கிற பொம்பளைங்களையே நேரே போய் வழிமறிக்கிறதுங் கறது. அத்து மீறல்! :-என்று சண்பகமே அவனை எதிர்த்து வாதிட்டாள். திருமலை அவள் வாதத்தை ஏற்க வில்லை. - r - -

எப்படியோ இயக்கம் முழுக்க முழுக்க இப்போது அவ. னது தலைமையின் கீழ் அவனுடைய முழுக் கட்டுப்பாட்.