பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேரடி குளக்கரைகளில் இருந்த திருமலையின் பெட். டிக்கடைகளை என்க்ரோச் மெண்ட்’ என்றும் சாலைப் போக்குவரத்துக்கு இடையூறு என்றும் அங்கிருந்து அகற் றும் முயற்சியில் உள் பட்டணத்துப் பெரும் புள்ளிகள் இறங்கினார்கள்.பஞ்சாயத்து போர்டில் ஆட்களைப்பிடித்து. அந்த இடங்களில் உள்ள கடைகள் பொதுமக்களுக்கு மிக வும் உபயோகமானவை என்றுதீர்மானம் போட வைத்துக் குறைந்தபட்ச வர்டகையும் நிர்ணயிக்க வைத்துத் தன் னைப் பாதுகாத்துக் கொண்டான் திருமலை. ஊரார் அவனை மதித்துப் பயப்படவில்லை. ஆனால் பயப்பட்டு மதித்தார்கள். பயப்படாதவர்களை மிரட்டிக் கூட்டம். போட்டு வாயில் வந்தபடி திட்டும் வ ச தி அவனுக்கு, இருந்தது. பெரிய கனவுகளுடனும் காதலுடனும் அவனையே அடைவதென்று உருகித் தவித்து அவனை மணந்து கொண்ட சண்பகத்துக்குக் கூட இப் போது சலிப் பாக இருந்தது. அவளோடு ஒர் அரைமணி நேரம் உடன் உட்கார்ந்து இதமாக நாலு வார்த்தை பேசக்கூட அவ. னுக்கு இப்போது நேரமில்லை. மாதத்தில் இருபது நாட் கள் வெளியூர்களில் அலைச்சல். மீதிப் பத்து நாட்களில், உள்ளூரிலேயே கூட்டம். குடும்பத்தையோ சண்பகத். தையோ கவனிக்க அவனுக்கு நேரமே இல்லை. - கிருஷ்ணராஜன் மந்திரியாகி விட்டதால் திருமலை தன்னுடைய மேடைப் பேச்சுக்களில் விடாமல் அவனைத் தாக்கி வந்தான். மந்திரியாக இருந்த சின்ன உடையார் இந்தத் தாக்குதலைக் கண்டுகொள்ளாமலும் பொருட் படுத்தாமலும் விட்டு விட்டதால் இவனது எரிச்சல் இன் னும் அதிகமாகியது. - - t - நாம் யாரை முழு ஆக்ரோஷத்தோடு குத்தித் த க்கு. கிறோமோ அவருக்கு அது வலிக்கவில்லை எ ன் று. தெரியும்போது நமக்கு மேலும் கோபம்தான் வருகிறது. நமது தாக்குதல் நம் எதிரிக்கு வலிக்க வேண்டும் உறைக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம். அது வலிக்,