பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 - நா. பார்த்தசாரதி

ஆனால் ஒரு மாறுதல், ஒரு மணிக்கு மேல், "அண்னே! கொஞ்சம் வாங்க். வெளியே ஒரு ரவுண்டு ப்ோய் வர லாம்' என்று வாசலில் காரைக்கொண்டு வந்து நிறுத்தி, னான் அந்த ஊரில் அவனுடைய கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தவன் x -

'எங்கப்பா போகணும்? இந்நேரத்துக்கு ஏன் தொந்த ரவு செய்யிறே?’’ . : .

"தொந்தரவு ஒண்னும் இல்லே! எல்லாச் சுகம்தான் வாங்க.சொல்றேன் ! வந்தாத்தானே தெரிஞ்சுக்குவிங்க' என்று குறும்புச் சிரிப்புட்ன் மீண்டும் வற்புறுத்தினான் கூப்பிட்டவன். திருமலைக்குப்புரிந்தது. ஆன்ால் புரியா தது போல் நடித்தான்.

'ரொம்ப ஹை-கிளாஸ். புதுச் சரக்கு இப்பத்தான் வந்திருக்குது முத்தின மாடில்லே இளசு. அண்ணனுக் கா க. ' -

"ஹைகிளாஸ்னா..?'

அவன் விவரம் சொன்னான். -

"ஆங்!... அதான் விசாரிச்சேன். பண வசதியும், சமூகத்திலே மேல் மட்டத்திலே இருக்கிறோம்கிற திமிரும்- சேர்ந்து இதுவரை அவனுகதான் மத்த சாதியில, பூந்து வெள்ளாடினாங்க. இப்ப_மேல் மட்டத்துப் ப்ொண்ணுங்களே இப்பிடி நம்பு லையன்லே வருதுங்கிறே, முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும்கிறது சரிதான்."

எல்லாப் பொண்ணுங்களிலேயும் சிலது தட்டுக் கெட்டுப் போறப்ப இவங்களிலேயும் சிலது இப்பிடிக் கெட்டாத்தான் என்னான்னேன்?’’ -

  • கெடட்டும்...நாமே கெடுப்போம். அப்பவாவது. இந்த உள் பட்டணத்துக் கயவனுங்களுக்குப் புத்தி வர்ட்டும்.'

இருளில் நெடுந்துாரம் பயணம் செய்து ஊரிலிருந்து ஒதுக்கப்புறமாக ஒரு தோட்டத்தின் நடுவே அமைந்தி ருந்த வீட்டின் முகப்பில் போய்க் கார் நின்றது. முகப்பி, லேயே செண்ட், ஊதுபத்தி வாசனைகள் மூக்கைத் துளைததன. - -

அவனைக் கூப்பிட்டுக் கொண்டு வந்தவன், 噸 •א : 谈 叛 得 - 始 ,桑 * *

அண்ணே! இறங்குங்குக...நீங்க திரும்ப வர்றவரைக்கும் நானும் காரும் இங்கேயே காத்துக்கிட்டிருப்போம்"

என்றான்.