பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 57

'நான் இல்லாததை ஒண்னும் சொல்லலே! இதோ: இதைப் பாருங்க, புரியும். உங்களைப் பத்தி இப்படித் தாறுமாறா வர்ரதைப் பார்த்தா நல்லாவா இருக்கு...?’என்று வினவியபடியே மறைத்து வைத்திருந்த அந்தப் பத்திரிகையை எடுத்துப் பிரித்து அவனிடம் நீட்டினாள். அதை அவளிடம் இருந்து வாங்கிப் படித்த அவன் தனக்கு ஏற்பட்ட ஆத்திரத்தில் சீறினான்.

உங்க பேருக்குத் தபால்லே வந்திச்சு. பிரிச்சுப்

படிச்சேன்.’’

'எனக்கு வந்த தபாலை நீ எப்பிடிப் பிரிக்கலாம்?’’

కి._ - -

சுளிரென்று அவள் கன்னத்தில் மாறி மாறி அறைகள் விழத் தொடங்கின. ஒவ்வொன்றும் ஒரு பேயறை. வலி பொறுக்க முடியாமல் அவள் கதறிய கதறலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை விழித்துக் கொண்டு மருண்டு போய் அழ ஆரம்பித்தது. ..

'சி! நீ ஒரு மனுஷனா? நீ பண்ணின தப்பைச் சொன்னா அதுக்காக இப்பிடிப் பிசாசு மாதிரி அறை விநியே...?? - . :

ஆத்திரத்தில் கூப்பாடு போட்டாள் அவள். வலியும். வேதனையும் தாளாமல் ஏக வசனத்தில் வந்துவிட்டது. - "ஆம்பிளை உடம்பிலே வலுஇருந்தா என்னவும் பண்ணுவான். எங்கேயும் போவான். அதைக் கேக்கற துக்கு நீ யாருடி?" . . . . . . . . . -

"நான் கேக்காமே வேறயாரு கேட்பாங்க?... தெரு வில் போறவளா.வந்து கேப்பான்னேன்? .

‘'எதுத்தர் பேசறே...? வாயை மூடுடி' மறுபடியும் அறை. குழந்தையையும் அவளையும் தனியே விட்டுவிட்டு வெறியோடு வெளியேறினான் திரு. மலை. அவளும் குழந்தையும் கதறியழுத, சத்தம் கேட்டு