பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தக் கதையின் உள்ளோட்டமான சுருதியை யாரும் தட்டிக் கேட்கவில்லை; ஆனால் அவரா, இவரா என்று சர்ச்சை செய்வதிலேயே நேரம் கழிக்கிறார்கள். அம் மாதிரிச் சர்ச்சை அநாவசியமானது. தேவையற்றது.

இந்நாவல் முற்றிலும் கற்பனையே - எல்லா வலு வான் கற்பனைகளும் உண்மைபோலத் தோன்றுவதிைத் தவிர்க்கவோ, வில்க்கவோ முடிவதில்லை. உண்மையோ என மருண்டு போக வைக்கும் கற்புனைப் படைப்பு ஏதுவேர் அதற்கு அது ஒருவகையில் பெருமைதான். சிற்ப்புத்தான். நற்சான்றுதான்.

ஒரு காலகட்டத்தைத் தத்ரூபமாகச் சித்திரிக்க முயன்று பார்த்ததின் விளைவுத்ர்ன் இந்த நாவல். ஒரு வேள்ை இன்னும் இருபதாண்டுகளுக்குப் பிறகு இப்போது உணர்வதை விட இதன் அருமைப்பாட்டை மிகவும் நன்றாக உணர முடியுமோ என்னவோ? அதுவரை பொறுமையாக இருக்கக்கூட நான் தயார்.

பாமர மக்களை விழிப்படையச் செய்யும் முயற்சியில் உருவாகும் இலக்கியப் படைப்புக்களை உருவாக்குகிறவர் களுக்குச் சில சோதனைகளும், எதிர்ப்புக்களும் ஏற்படத் தான் செய்யும். 'ன்னை வகையால் தேறியக் கண்ணும் வினை வகையால் வேறாதல்" என வள்ளுவர் கூறுகிறாரே அதுதான் கட்சியாயிருப்பவர்கள் ஆட்சியாக ம்ாறும் போதும் நடக்கிறது. அதை எழுதினால் கசப்பாக இருப்பதுபோல் தோன்றுவது இயல்பு, கசப்பாக உணர் வதும் இயல்புதான்! • , - • காரணம்-உண்மை கசப்பான்து. ஆனால் சிலவற். றைக் கசப்ப்ானது என்று முன்னதாக உணரும் ஞானம் எதுவோ அது இனிப்பான்தே.

அத்தகைய ஞானமும் பக்குவமும் இருந்தால்தான் ந்த நாவலைப் படிக்க முடியும். இது சிக்க முடியும், ஆப்படி ஞானமும் பக்குவமும் கொண்டு இதைப் படிக்கப் போகிறவ்ர்கள், ஏற்கென்வே படித்து முடித்துவிட்டு ஆத்தகைய ஞானத்தையும் பக்குவத்தையும் பெற்றவர்கள், இரு சாரருக்கும் என் அன்பையும் வாழ்த்தையும் கூறிக் கொள்கிறேன்.

கல்கியில் வெளியான இந்நாவலை இப்போது தமிழ்ப் புத்தகாலயத்தார் நூல் வடிவில் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு என் நன்றி -

தீபம் 9.6.1985 நா. பார்த்தசாரதி