பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

毫8 ” • - நா. பர்ர்த்தசாரதி

என்னவோ ஏதோ என்று பதறி ஓடிவந்த அக்கம்பசீக் தாரிடம், ராத்திரி முருங்கைக்காய் சாம்பாரு வைக்கச் சொல்லியிருந்தாரு. மற்ந்து பேச்சு...அதுக்காகக்கோவிச் சுக்கிட்டு இத்தன்ை கூத்தும் பண்ணிட்டுப் போறாரு'என்று பொய்சொல்லிச் சமாளித்தாள் சண்பகம்.

அதன்பின் அவளது இல்வாழ்க்கை நரகமாயிற்று. தினம் வீடு திரும்பினால் அடிதான். உதைதான். திருமல்ை யைத் திருத்த அவளால் முடியவில்லை. அவன் சார்ந் திருந்த மனிதர்களில் யாரும் தனிமனித ஒழுக்கத்தையோ சமூக ஒழுக்கத்தையோ பற்றி அக்கறை ஏதுவும் காட்வில்லை. ஒழுக்கச் சிதைவையே நியாயப்படுத்தி.முயன் றார்கள். குடும்பம் என்ற அமைப்பின் புனிதத்தை மதிக்கத் தயாராயில்லை. குடும்பம் என்கிற கரையை உடைத்துக் கொண்டு காட்டாறாகப் பெருகினான் அவன். தந்தைத தாய், உடன் பிறந்தான் அத்தனை பேருடைய பேச்சை யும் மதிக்காமல் இந்த மனிதனைக் காதலித்து மணந்த வேதனை அவளை வாட்டியது. வாழவும் முடியவில்லை. அவனை விட்டுவிட்டு ஓட வேறு போக்கிடமும் இல்லை. சாகவும் வழியில்லை. வீட்டின் நாலு சுவர்களுக்குள்ளேயே தேய்ந்து நைந்து சண்பகம் நலிந்து கொண்டிருந்தாள், கூட்டம், இயக்கம், கட்சி வேலைகள் என்து, வீட்டுக்குச் சதா வந்து கொண்டிருந்த கும்பலுக்குப் பிரியாணி தயா ரித்துப் போடும் சமையற்கர்ரியாகக் காலந் தள்ளினாள் அவள். பார்க்க அடையாளமே தெரியாமல் எலும்பும் தோலுமாகக் களையிழந்து போனாள் சண்பகம். சண்ப கத்தை இந்த நிலையில் வைத்ததற்காகத் திருமலையைக் கண்டிப்பார் யாருமில்லை.

'தலைவர் இருக்காங்களா? - என்று கைகட்டி வாய் புதைத்துத் தேடி வருகிறவர்களிடம் அவனைவிட்டுக் கொடுத்து அவள் என்ன சொல்ல முடியும்? வீடு, வரு மானம், மின் விசிறி, கட்டில், சோபா என்று வசதிகள்,