பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'மூலக்கனல் 63

ஆரம்பித்து விட்டார்கள். நமது இயக்க வீரர் திருமலை எழுதிய 'செந்தமிழ்ப் பூஞ்சிட்டுக்களே என்ற பாடல் மிக அருமையாக, செழுமையாக, எளிமையாக-வலிமையாக -இயக்க உணர்வுகள்ை எடுத்தியம்புவதாய் அமைந்து விட்டது. அப்பாடல் தலை சிறந்தது-கலை சிறந்ததுதிசை யுயர்ந்தது. திரு விடமெங்கும் ஒரு இடமும் விடா மல் ஒலிக்க வேண்டிய பாடன் அத் என்பதை நீ உணர்ந் திட வேண்டும் தம்பீ-என்பதாக நூறாவது நாடகத்துக் குத் தலைமை வகித்து அது திருச்சி தேவர் மன்றத்தில் நடந்த போது அவன் பேரறிஞர் பெருந்தகையாய்க் கருதிய அண்ணனே புகழ்ந்த பின் அவனுடைய மதிப்பு மேலும் அதிகமாகிவிட்டது, அதை ரெக்கார்டு ஆகப் பதிவு செய்து இயக்கக் கூட்டங்களில் எல்லாம் ஒலிபரப்பினார் கள். அண்ணனின் அபிமானத்துக்குரிய பாடல் என்பத்ால் அது பெரும் புகழ் பெற்றது. பெரும் பொருள் ஈட்டியது.

இயக்க உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வசனங்களும், பாடல்களும், நாடகங்களிலும், மேடைகளிலும், திரைப் படங்களிலும் அமோக வெற்றியைப் பெற்றுக் கொண்டி ருந்த காலம் அது. = -

தங்கள் இயக்கப் போராட்டங்களில் அவன் முன்னணி வில் நின்றான்-லால்சந்த் நகர்'என்ற பெயரைப் புளிய மரத்துப்பட்டி என்ற அதன் பழைய நிலைக்கு மாற்றுவதற் காக அந்த நிலையத்தில் ரயிலுக்கு முன் மறியல் செய்து தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த முன்னணி வீரர் களுள் அவனும் ஒருவனாயிருந்தான். என்றாலும் தனக்கு முறையான வடிப்பில்லை என்பதை உணரும்போதும், உணர்த்தப்படும்போதும் அதை உணர்த்தியவர்கள் மீது அவன் படமெடுத்து ஆடி விஷம் கக்குவதற்குத் தயங்கிய - தில்லை. - . . . .

உள்ளுர்த் திருக்குறள் கழகத்தில் ஒரு முறை அவனைப் பேசக்கூப்பிட்டு அவன், 'திருக்குறளின் நாலா :யிரம் பாடல்களிலும் தமிழ்ப்பண்பாடு தகத்தகாயமாய்