பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 1

மூன்னே நடக்க வழியோ இடமோ இல்லை என்று ஆகிறபோது பின்னால் திரும்ப வேண்டி நேர்வது தவிர்க்க முடியாதது. மேலே ஏறுவதற்கு உயரமோ, சிகரமோ இல்லாத போது கீழே இறங்க வேண்டியதைத் தவிர வேறு வழியே இல்லை. படியேறுவதைப் போல் படியிறங்குவது அத்தனை சிரமமான காரியமில்லைதான். ஏறுவவற்கு ஆன நேரத்தின் பாதி நேரத்திற்குள் கீழே இறங்கி விடலாம். நினைவுப்பாதையில் படியிறங்கித் திரும்பிப் பின்னோக்கி நடப்பதும் அப்படித்தான். கழிந்து போனவற்றை நினைந்து உருகுவதற்குத் தமிழில் அழகான சொற் றொடரே இருக்கிறது. கழிவிரக்கம்’ என்று எத்தனை பொருத்தமாகப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

அவனுக்குத் தன்னுடைய மனத்துக்குள் அந்தரங்கத் தில் ஏதோ வேகமாக வற்றிக் குறைந்து கொண்டிருப்பது போல் ஓர் உணர்ச்சித் தவிப்பு. குறைந்து கொண்டிருப்பது என்னவென்று சரியாக நினைக்கவும் சொல்லவும் தெரிய விலலை. ஆனால் உருவெளித் தோற்றத்தில் அது ஒரு காட்சியாக மட்டும் தெரிந்தது. மிகவும் மங்கலாகக் கனவுக் காட்சி.போல் தெரிந்தது. - .

ஒரு பெரிய அகல் விளக்கில் எண்ணெய் வற்றித் திரி தன்னையே எரித்துக் கொண்டு பின்னோக்கி நகர்வது போல் மனவெளியில் காட்சி. எரிப்பதற்கு வேறு எதுவும் இல்லாத போது தானே தன்னை எரித்துக் கொண்டு மடியும் சுபாவம் நெருப்பினுடையது.