பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 59

ஊரில் யாருக்கும் பிடிக்கவில்லை. சின்ன உடையாருக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து தேருக்கு முதல் இடம் பிடிப்பது என்பது வழக்கமாகியிருந்தது. ஒரு வம்புக்காக அதை எதிர்ப்பது என்பது யாருக்கும் திருப்தி தரவில்லை. திருமலைக்கு இரகசியமாகத் தமிழ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த வேணுகோபால் சர்மா கூட அதை அவனி டமே கண்டித்தார். மதச்சார்பற்ற என்பதற்கு அர்த்தம் எல்லா மதங்களையும் சமமாகப் பாவிக்கிறது என்ப தானே ஒழிய, இந்து மதத்தை மட்டுல் ஒழிக்கிறதுங்கற தில்லே. ஒரு கிறிஸ்தவ அமைச்சரே இஸ்லாமிய அமைச் சரோ இப்படித் தங்கள் மத சம்பந்தமான விழாவுக்கு வந் தாங்கன்னா அவங்களுக்குக் கறுப்புக் கொடி பிடிக்கிற துணிச்சல் உங்களுக்கு உண்டா? ஊருக்கு இணைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பதுபோல் நடத்து கொள்கிறீர்களே!” - -

சாமி இதெல்லாம் அரசியல்! உங்களுக்குப் புரியாது. நீங்க கண்டுக்காம ஒதுங்கிக்குங்க! எங்களுக்கு உடை யாரை எதிர்க்கணும், அதுக்கு என்ன வேணாச் செய் வோம்' என்று அவருக்குப் பதில் சொல்லிச் சமாளித்தான் திருமலை. சர்மா எத்தனையோ தடவை திருப்பித்திருப்பிக் கண்டித்தும் அவன் அவரைச் சாமி என்றுதான் விளித் தான். -

அவன் சினிமாக் கம்பெனிக்கு வசனம் எழுதுவதற் காகச் சென்னைக்குப் புறப்ப்ட் வேண்டிய சமயத்தில் இந்தக் கறுப்புக் கொடிப் போராட்டம் வந்ததால் பயணம் தடைப்பட்டது. திருவிழாவில் தேரோட்டத்துக்கு இடிை. யூறாகக் கலவரம் மூளுமோ என்று பயந்தனர் போலீஸார், கறுப்புக்கொடிப் போராட்டத்துக்கு அதுமதி தரப்பட வில்லை. தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

துணிந்து தடையை மீறிக் கறுப்புக்கொடி காட்டிய தால் கைதாகி ஒரு வாரம் கழித்துத்தான் வெளியிலே வர. முடிந்த்து. உடையார் எதை செய்தாலும் எதிர்க்கவேண்டு