பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் -: тз

சீண்டிவிட்டன. ஆச்சியும். சண்பகத்தின் தம்பியும் அக்கம் பக்கத்தாரும் ஓடி வந்து விலக்கியிராவிட்டால் திருமலை சண்பகத்தைக் கழுத்தை நெரித்துக் கொன்றிருப்பான் அப்போது. • . - .

'அறுத்தெரியறதுக்கு நீ எங்கழுத்திலே தாலி கூடக் கட்டலே...இன்னியிலேருந்து உனக்கு ம் எனக்கும் இனிமேப் பேச்சு வார்த்தையே கிடையாது. உன் முஞ்சி யிலேயே இனிமே முழிக்க மாட்டேன்’ என்று குழந் தையை எடுத்துக் கொண்டு அந்த வீட்டிலிருந்து வெளி யேறித் தம்பியோடு மறுபடி நந்தவனத்துக்கே போய்விம் உாள் சண்பகம். எந்த ஒரு பலவீனமான பகுதியைச்சீண்டி யதற்காக.அவன் உள் பட்டணத்தின் மீது ஜன்ம விரோதி யாக மாறினானோ அதே பகுதியை இப்போது கீறி ரனப் படுத்தி விட்டாள் சண்பகம். எல்லாவற்றையும் மறக்க மறைக்க அவன் வடக்குத் தெரு ஆசைநாயகியோடு பட்டினம் புறப்பட்டான். சினிமா உலகம் அவனைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது. அவனது வாழ்க் கையில் மற்றோர் அத்தியாயம் புதிதாக ஆரம்பமாகியது. முதல் படம் அமோகமான வெற்றியை அடைந்தது. நூறு நாளையும் கடந்து பல ஊர்களில் படம் ஹவுஸ்ஃபுல்” ஆக ஒடவே ஒரே சமயத்தில் பல படங்களுக்கு வசனம், பாடல்கள் எழுத வேண்டிய சான்ஸ்கள் அவனைத் தேடி வந்தன. ஓர் உதவியாளர் நம்பிக்கையானவராக வேண்டி யிருந்தது. எழிலிருப்புப் புலவர் வேணுகோபால் சர்மா வுக்குத் தந்தி கொடுத்தான். சர்மா உடனே அடுத்த சயிலிலேயே சென்னைக்குப் புறப்பட்டு வந்து சேர்ந்தார்.

11 திருமலைக்கு ஆசிரியராக இருந்து கற்பித்த சர்மா

அவனுக்கே உதவியாளர் ஆகிவிட்டார். எல்லாச் செலவும் போக ஊரிலுள்ள குடும்பத்துக்கு மாதம் ஐந்நூறு ரூபாய்