பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፶6 நா. பார்த்தசாரதி.

பணத் திமிரும், கொழுப்பும் தான் உங்களை இப்படி எல். லாம் செய்யத் தூண்டுகிறது. இதை ஏற்றுக் கொள்கிற, அளவு நாங்கள் மானங்கெட்டுப் போய்விடவில்லை. கோயில் வாசலில் பூத்தொடுத்து விற்றாவது தன் மகனைக், காப்பாற்ற முடியும் என்று என் அக்காளுக்கு நம்பிக்கையி. ருக்கிறது- என்பதாகக் குமுறலோடு எழுதப்பட்டிருந்தது. சண்பகத்தின் தம்பி கடிதம். திருமலைக்கு முகத்தில் அறைந்த மாதிரி இருந்தது. அதன்பின் ஊருக்குப் பணம் அனுப்பும் எண்ணம் அவனுக்கு வரவே இல்லை. தாயிட மிருந்து மகனைப் பிரித்து மகன் தன்னோடுதான் இருக்க வேண்டும் என்று வழக்குப் போடலாம் என்பதாகத் திருமலைக்கு யாரோ யோசனை சொல்லித் தூண்டி விட் பார்கள். அந்த யோசனையை அவன் ஏற்கவில்லை. தன்னோடு இருந்தால் பையனைக் கவனிக்கத் தனக்கு நேரமிருக்காது என்கிற பயமும், தான் வசிக்கிற ஆசை. நாயகி வீட்டில் சண்பகத்துக்குப் பிறந்த பிள்ளை என்பதா லேயே அவன் அநுபவிக்க நேரும் கொடுமைகளைப் பற்றிய எண்ணமுமே திருமலையைத் தடுத்தன. தானிருக், கும் திரை உலகின் நிலைமைகள் ஒரு வளரும் சிறுவனை. என்னென்ன செய்யுமோ என்ற தயக்கமும் உள்ளுற. இருந்தது. -

ஏற்கெனவே பொன்னுச்சாமி அண்ணன் காலமான பின் வாழ்வின் எல்லா ஒழுக்க நெறிகளையும் கடைப் பிடிக்க இயலாமல் தாறுமாறாகச் சீரழிந்திருந்தான். திருமலை. சென்னை வாசமும் திரையுலகப் புகழும், பண. வசதிகளும், மேலும் அவனைச் சீரழித்திருந்தனவே. ஒழியப் புண்படுத்தவில்லை. வீடு, கார், வசதிகள், எதுவுமே அவனை மாற்றிவிடவில்லை. மேலும் மோசமா கவே ஆக்கியிருந்தன. எழிலிருப்பையும் அதனோடு தொடர்புடை தன் நாட்களையும், சம்பவங்களையும் மெல்ல மறக்க முயன்றான் அவன். - -