பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 80 நா. பார்த்தசாரதி

என்னடி பெரிய மினிஸ்டர்? நானும் ஒரு நாள் மினிஸ்டிராகி இதே மாதிரி இவன் பொட்டி படுக்கையை வராண்டாவிலே தூக்கி எறியாட்டி நான் ஆம்பளை

இல்லே'-என்று வாட்ச்மேனிடம் சவால் விட்டான் அவன்.

12

திருமலையைப் போலவே இயக்கத்தில் ஈடுபாடுள்ள தலைவர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள்,எல்லோருமே. நாடகங்களில் நடிப்பது, திரைப்படங்களுக்கு வசனம், பாடல்கள் எழுதுவது, வெடிப்புள்ள தமிழ் நடையில் இயக் கத்திற்கான ஏடுகள் நடுத்துவது என்றெல்லாம் பல வழி களில் முனைப்பாக இறங்கினர். காங்கிரஸாரின் மெத்த னம், அலட்சியப் பேசக்கு, தாய்மொழி உணர்ச்சி இன. உணர்ச்சி, பிரதேச உணர்ச்சி பற்றிக் கவலையே படாமல் அவற்றைப் புக்கணித்த நிலை எல்லாமாகச் சேர்ந்து, திருமலை வகையறாவுக்கு விறுவிறுவென்று முன்னேறும். வாய்ப்புக்களை அளித்தன். அவர்கள் மொழி உணர்வே அற்றிருந்தார்கள் என்றால், இவர்கள் மொழி உணர்வே சகலமும் என்றார்கள். எழிலிருப்பில் மாவட்ட மாநாடு முடிந்து உடையாரால் ஏ. சி.ரூமிலிருந்து வெளியேற்றப் பட்டு அவமானத்தோடும் ஆத்திரத்தோடும் சென்னை திரும்பிய திருமலை சில நாட்களில் 'திராவிடமுழக்கம் என்றோர் பத்திரிகைக்குத் தன்னை ஆசிரியனாகவும் வெளியிடுபவனாகவும் சீஃப் பிரசிடென்சி மாஜிஸ்திரேட் முன்பு பதிவு செய்து கொண்டான். அந்தக் கால க்ட்டத் தில் இப்படி வேறுபல ஏடுகளும் வெளிவரத் தொடங்கின. சினிமா வேலைகளோடு பத்திரிகை வேலைகளும் சேர்ந்து கொண்டன. இயக்கத்திற்கென்று இரண்டு மூன்றுதினசரி ஏடுகளும். ஏற்பட்டிருந்தன. ஆங்கில மொழி ஏடுகளும், பிரபலமான பிரதேச மொழித் தினசரிகளும் உள்ளூர்ச்