பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

°4 நா. பார்த்தசாதி

மூட நம்பிக்கையால் ஏமாற்றி சாமி படத்தில் கையடித்து வாங்கிப் பணம் கொடுத்து ஒட்டுச் சேகரித்தே ஜமீன்தார் வெற்றி பெற்றார் என்று இடை விடாமல் எழுதி வந்தான் அவன். சிலர் அதை நம்பி அதுதான் உண்மையோ என்று மருளவும் ஆரம்பித்தனர். தேர்தலில்தான் தோல்வியே ஒழியத் திரை உலகில் எப்பேர்தும் போல் அவனுக்கு வெற்றிகள் தொடர்ந்தன சொந்தமாக எடுத்த படம் டிஸ்ட்ரிப்யூட்டர்களிடம் நல்ல லாபத்துக்கு விலை போயிற்று, அவனே டைரக்டர், தயாரிப்பாளர் என்றெல் லாம் பெயரைப் போட்டுக் கொள்கிற துணிச்சலும், புகழும் வந்துவிட்டன. அந்த ஆண்டு அவன் எதிர்பாராத வித மாக ஒரு வழக்கில் சிக்கிக்கொண்டு பேரும் பணமும் கெட்டு நஷ்டப்பட்டுத் திண்டாட நேர்ந்தது. இயக்கத்தில் ஈடுபட்டுள்ள ஒரு குடும்பத்தில் திருமணம் ஒன்றிற்குத் தலைமை வகிப்பதற்காக அவன் போயிருந்தான். மணப் பெண் கொள்ளை அழகு சினிமாவில் கதாநாய்கியாக உடனே 'புக் பண்ணி நடிக்க வைக்கலாம் போல அத்தனைக் கவர்ச்சி அந்தப் பெண்ணுக்கு இருந்தது. மணமகன் வசதியுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆனால் அத்தனை அழகில்லை: சுமார் ரகம் தான். மண மகள் குடும்பம் தான் அவனுக்கு மிகவும் நெருக்கமான இயக்கத் தொடர்புடையது.

அந்த மணப்பெண்ணைப் பார்த்தவுடன் மனத்தில் என்ன தோன்றியதோ அதை அப்படியே மேடையில் பேசி விட்டான் அவன்.

'எங்கள் மணப்பெண் சினிமா நட்சத்திரங்களைப் புறமுதுகிடச் செய்யும் அத்தனை பேரழகுடன் விளங்கு கிறார். ஆந்திரத்திலிருந்தும், கேரளத்திலிருந்தும், கர்நாடகத்திலிருந்தும் அழகிகளைத் தேடியலையும் திரை யுலகம் இந்தப் பெண்ணைப் போன்ற தமிழ் அழகிகளை அடையக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்தப் பெண் மட்டும் நடிக்க வந்திருப்பராயின் நானே என்