பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 95

னுடைய தயாரிப்பு ஒன்றிற்கு இவரைக் கதாநாயகி யாகவே செய்திருப்பேன். கதாநாயகியாகத் திரை உலகில் துழைந்திருந்ததால் வரலாறு படைத்திருப்பார் இவர்’ என்று இப்படித் தொடங்கித் தொடர்ந்தது அவனுடைய தலைமை உரை. மணமகனுக்கும், மணமகன் வீட்டாருக் கும் இது பிடிக்கவில்லை. திருமணத் தலைமையில் 'மண மகள் நடிகையாகியிருக்கலாம் என்பது போன்ற பேச்சு என்னவோ போலிருந்தது. கெளரவமாகவும் இல்லை. தலைமை வகிக்க வந்த மூன்றாம் மனிதன் ஒருவன் மணப் பெண்ணின் அழகை அங்கம் அங்கமாக வர்ணிக்க ஆரம்பித் தது வேறு மணமகனுக்கும், அவனை ஒட்டி வந்திருந்த உறவினர்களுக்கும் எரிச்சலூட்டியது. அவர்களுக்கு இந்தத் தலைமை, இதுமாதிரி மேடைப் பேச்சு எதுவுமே பிடிக்கவில்லை. வர்ணனையும், சினிமாவில் நடிக்க வைக்கலாம் என்ற பேச்சும் வரம்பு மீறிப் போகவே பெண் வீட்டாரும் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் விழித்தனர். - r - ... - ஒரு வழியாக மணவிழா முடிந்தது. திருமல்ை சென்னை திரும்பினான். ஒரு வாரம் கழித்து அவன் தன் னுடைய புரொடக்ஷன் அலுவலகத்தில் இருந்தபோது யாரோ ஒர் அழகிய இளம்பெண் சூட்கேஸும் கையுமாகத் தேடி வந்திருப்பதாக வாட்ச்மேன் வந்து தெரிவித்தான். உள்ளே வரச்சொன்னால் அவன் தலைமை வகித்து நடத்திய அந்த மணவிழாவின் மணமகள் இரயிலிலிருந்து இறங்கிய கோலத்தில் பெட்டியும் கையுமாக எதிரே நின்றாள். . - . .

'சார்! உங்களை நம்பித்தான் புறப்பட்டு வந் திருக்கேன். எப்படியாவது என்னை ஹீரோயின் ஆக் கிடுங்க சார்! நான். அந்தக் காட்டானோட குடும்பம் நடத்த முடியாது. அவனுக்கு நான் அழகாயிருக்கிறதே பிடிக்கலே. வாய்க்கு வாய், "பெரிய ரம்பையின்னு நினைப்பாடி ன்னு குத்திக் காமிச்சிக்கிட்டே இருக்கான்.