பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 நா. பார்த்தசாரதி

கதாநாயகி மாதிரி அழகாயிருக்கேன்னு என்னைப் பத்தி புகழ்ந்து பேசினதுக்காக உங்க மேலே அவனுக்குப் படு: ஆத்திரம். என்னாலே இனிமே அந்த நரகத்திலே காலந்தள்ள முடியாது! நானே சொல்லாமல் கொள்ளாமல், புறப்பட்டு வந்திட்டேன்'- -

துணிந்து கணவனையே அவன் இவன் என்று ஏக. வசனத்தில் திட்டினாள் அவள். அவன் மணவிழாவில் அவளைப் புகழ்ந்த புகழ்ச்சி அவளுக்கு வீட்டை விட்டு ஓடி வருகிற துணிவையே அளித்திருக்கின்றதென்று திரு. மலைக்குப் புரிந்தது. அவள் செயலுக்காக அவளைக் கண்டிக்கவும் முடியாமல், பாராட்டி ஏற்கவும் முடியாமல் திணறினான் அவன். தனது பொறுப்பில்லாத பேச்சு புதிதாகத் தொடங்கிய குடும்ப வாழ்வு ஒன்றையே சீரழித். திருப்பது பற்றி அவன் கவலைப்படவில்லை. தன்னுடைய. இணையற்ற சொல்வன்மை தன் காலடியில் ஒர் அழகியைக் கொண்டு வந்து சேர்த்திருப்பதாகவே எண்ணிப் பெருமைப்பட்டான் அவன்.

மெல்ல மெல்ல அவளை வசப்படுத்திப் படத்தில் கதா நாயகியாக்குவதாக உறுதிமொழி கொடுத்து முதலில் தனக்குக் கதாநாயகியாக்கிக் கெர்ண்டு மகிழ்ந்திருந்தான் திருமலை. சில நாட்களில் விவரமறிந்த அவள் கணவன் திருமலையின் மேல் கிரிமினல் வழக்குத் தொடர்ந்தான். சினிமாவில் நடிக்கச் சான்ஸ் தருவதாகப் பொய் கூறித். தன் மனைவியைக் கடத்திச் சென்று கெடுத்து விட்டத்ாகத் திருமலைமேல் குற்றம் சாட்டியியிருந்தான். "அப்டக்ஷன்” (கடத்தல்) என்று வேறு பழி வந்திருந்தது. இந்த விவகாரம் ஒரு நாலைந்து மாதம் கோர்ட், கேஸ் என்று: அவனைச் சீரழித்து விட்டது. கணிசமாகச் செலவும் வைத்து விட்டது. சாதாரண மனிதனாக இருந்து கொண்டு ஒரு பெண்ணைப் புகழ்வது வேறு, சினிமாத் தயாரிப்பாளர் இயக்குநராக இருந்து கொண்டு ஒரு பெண்ணைப் புகழுவது அபாயகரமான காரியம் என்பது: