பக்கம்:மூவரை வென்றான்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

மூவரை வென்றான்/தலைவெட்டிக்...


அதைக்கண்ட மாறனேறி அம்பலகாரர்கள், இனி இங் கிருப்பது வீண்-என்று தீர்மானித்தவர்களாய், இருளில் ஊரை நோக்கி மெல்ல நழுவினர். அவர்கள் போனபிறகும் கால் நாழிகை, அரை நாழிகை கழித்துத்தான் ஐயர் சிலம்பக் கழியைக் கீழே வைத்தார். அவருடைய வஜ்ரம் பாய்ந்த சரீரம் வேர்வையில் முழுகியிருந்தது. கடுக்கனுடைய ஆட்டத் தால் காது நுனிகள் கன்றிச் சிவந்திருந்தன. கண்கள் நெருப்புத் துண்டங்களாக மாறியிருந்தன.

‘ஏண்டாப்பா ராஜு எனக்காக இந்த அர்த்தராத்திரி யிலே இப்படி ஊரைத் திரட்டிக் கொண்டா ஒடி வரணும்? இந்த உடம்பைவிட உயிர் கெட்டியானதுடா? ஒரு பயல் அசைச்சுக்க முடியாது...இன்னும் எட்டு நாளானாலும் இப் படியே கழியைச் சுற்றி உயிரைக் காப்பாத்திப்பேனே ஒழிய, இந்த அம்பலகாரங்க கிட்டக் கொடுத்திட்டுப் போயிட மாட்டேன், வா! போகலாம்...' - ஒன்றும் நடக்காததைப் போலப் பேசிக்கொண்டே, மூட்டையைத் துரக்கித் தலையில் வைத்துக்கொண்டு அவர்களோடு நடந்தார் ஐயர்.

'மோதிரக் கடுக்கன் மோதிரக் கடுக்கன்தான். இவருக்கு எதிரி இன்னும் பிறக்கலை ஐயா. இவர் அஜாத சத்துருஎன்று தொடர்ந்து ஒரு வாரம் ஊரெல்லாம் புகழாயிருந்தது. இந்தச்சம்பவம் நடந்த பிறகும் ஐயர் வழக்கம் போலத் தலை வெட்டிக் காடுவழியே தாள்கொண்டான்புரம் மாறனேரி ஊர்களின் வழியே சிவகாசிக்குப் போய்க்கொண்டும் வந்து கொண்டும்தான் இருந்தார். தம்பி ராஜூவும் ஊராரும் எவ்வளவு தடுத்தாலும் அவர் கேட்கவில்லை. பிடிவாதம் முரட்டுத் தைரியத்திற்குத் தோழனைப் போன்றது.

ஊராரும் தம்பியும் தடுத்தபோது ஐயர், 'சரிதாண்டா! சும்மா இருங்க! உங்க சோலியைப் பார்த்துக்கொண்டு. போங்க. என் வழியிலே நான் போகிறேன். திராணியிருந்தா ஒருபயல் என் மேலே கைவச்சுப் பார்க்கட்டும் சொல்கிறேன்? அடேய் ஒன்று நான் ஏமாறனும் இல்லாட்டா இயற்கையாச் சாகணும். எதிரின்னு எவன் கையால்ேயும் எனக்குச் சாவு