பக்கம்:மூவரை வென்றான்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

103

கிடையாதுடா என்று இரைச்சல் போட்டுவிட்டுப் போய்ச் சேர்ந்தார். இதற்குப் பின்னும் ஐந்தாறு முறை பலவிதங் களில் அவரைத் தீர்த்துக்கட்ட வேண்டும். முடியாத பட்சத் தில் அந்த மோதிரக் கடுக்கனையாவது காதோடு அறிந்துவிட வேண்டும்' - என்று அம்பலக்காரர்கள் முயன்றனர். எல்லா முயற்சிகளும் சதித் திட்டங்களைப்போல ரகசியமாக நடந்தன.

இந்தச் சம்பவம் நடந்து பத்துப் பதினைந்து நாட்களுக் குப் பின்பு ஏறக்குறைய இதேமாதிரி மற்றொரு சம்பவமும் நடந்தது. அன்றைக்குப்போலவே மோதிரக் கடுக்க்ன் ஐயர் சிவகாசிக்குப் புறப்பட்டார்.

'ஏ! ஐயரே! உன்னோட 'மல்லுக்கட்டுக் குஸ்தி' போட்டு ரொம்ப நாளாயிடிச்சு, இப்படி வாயேன். இந்த மணல்லே ஒரு 'கோதாப்' போட்டு ஆடுவோம். ஜெயிச்சிட்டா நீ வழியோட போயிடலாம் என்று கூறிச் சில அம்பலக்காரர்கள் அவரைத் தலைவெட்டிப் பள்ளத்திற்குள் வைத்து முன் போலவே வழி மறித்தனர். குஸ்தி நடந்து கொண்டிருக்கும் போதே குஸ்தி முறைக்கு மாறாக ஐயரின் கண்களில் மணலை அள்ளிப்போட்டுவிட்டுக் காதை அறுத்துக் கடுக்கன்களைக் கொள்ளையடித்துவிட வேண்டும் என்பது அவர்களுடைய அன்றையச் சதித் திட்டம். முன்பெல்லாம் ஐயரைத் தீர்த்துக் கட்டவேண்டும் என்று முனைந்து நின்ற அல்பலக்காரர்கள், இப்போது அது அசாத்திய்ம் என்று உணர்ந்து, அந்த எண்ணத்தை அறவே கைவிட்டு விட்டனர். அவருக்கு ஒரு தீராத அவமானச் சின்னமாக இருந்து, உயிரோடு வாழும் , போதே நினைவினால், அவர் மனம் ஏங்கும்படியாகக் காது களைக் கடுக்கனோடு அறுத்துவிட்டால் போதும் என்று முடிவு செய்திருந்தனர். இப்போது, காதறுத்து, கடுக்கன்களை இழந்துவிட்டால் பீமசேனன் மாதிரி இருக்கும். அந்த முகத்தின் காம்பீர்யம் பாழாகி, மூளித்தனமும் அமங்கலமும் குடிகொண்டுவிடும் கொல்வதைவிட உயிரோடு சித்திரவதை செய்வது போன்றது. இது என்பது அவர்கள் தீர்மானம்.