பக்கம்:மூவரை வென்றான்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

மூவரை வென்றான்/தலைவெட்டிக்...


பற்றிக் கேள்விப்பட்ட இந்தக் கதை நினைவுக்கு வரும் போதெல்லாம் ஒரு திருக்குறளும் என் நினைவில் மலரும்.

கவரிமான் என்று ஒருவகை மான் தன் வாலிலுள்ள நீண்ட மயிர்க் கற்றைகளை யாராவது அறுத்துவிட்டால், உடனே ஏங்கி ஏங்கிச் செத்துப் போகுமாம். மோதிரக் கடுக்கன் முத்துசாமி ஐயரின் வாழ்வும் கவரிமானின் வாழ்வும் அதிகம் வித்தியாசப்பட்வில்லை என்று எண்ணிக் கொள்வேன்.

 ‘மயிர் நீப்பின் வாழாக் கவரிமாவன்னார்
உயிர் நீப்பர் மானம் வாரின்’

கிரேக்க மகாகவி ஹோமரின் ‘இலியாது’ என்ற காவியத்தில் ‘அச்சிலிஸ்’ என்ற வீர புருஷனுக்கு முழங்கால் மூட்டில் உயிர்நிலை இருந்தது என்றும், பைபிளில் வருகின்ற ‘ஸாம்ஸன்’ என்ற வீர புருஷனின் கதையில் அவனுக்குத் தலைமயிரில் உயிர்நிலை இருந்ததென்றும் படிக்கிறோமே! எங்களுர் மோதிரக் கடுக்கன் முத்துசாமி ஐயருக்கு உயிர்நிலை காதுகளிலும் அவற்றில் தொங்கிய கடுக்கன் களிலும் இருந்தனவோ என்னவோ? அச்சிலீலையும் ஸாம்ஸனையும் போல அவர் காவிய புருஷனில்லை. ஆனால் அதற்குத் தகுதி இல்லாதவரா?