பக்கம்:மூவரை வென்றான்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

119


உண்டாக்கினவோ அவைகளின் பயங்கரச் சூழ்நிலையை மதித்து ஒரு பொருட்டாகக் கருதி அஞ்சாது சென்று சோதனை செய்தார். துணிவு துணிவுதான் என்றாலும் ஊர் எச்சரிக்கையும் பேச்சுக்களும் சேர்ந்து அவருக்கு ஒருண்மை யைப் புலப்படுத்தியிருந்தன. எந்த நேரமும் தமது உயிர் அபாயும் சூழ இருக்கிறது என்ற எண்ணம்தான் அந்த உண்மை.

அன்று பெளர்ணமி நல்ல நிலா. இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தது. இரவு மணி ஒன்பது இருக்கும். தேவருக்குத் துரக்கம் பிடிக்கவில்லை. வீட்டுத் தாழ்வாரத்தில் குறுக்கும் நெடுக்குமாக உலாவிக் கொண்டிருந்தார். மாயாண்டித் தேவனைக் கண்டுபிடிக்கின்றவரையில் குடும்பத்தோடு அந்த ஆவரில் குடியேறுவதால் தனக்கு நேர்கின்ற துன்பங்களை மனைவி, குழந்தைகளும் படவேண்டி வரும் என்ற கருத்துடன் முல்லையூற்றில் தேவர் வாடகை வீட்டில் தனியாகவே வசித்து வந்தார். குடும்பத்தோடு வரவில்லை. ஹோட்டலில் சாப்பாடு வைத்துக் கொண்டிருந்தார். உறக்கம் வராமற். போகவே பிஸ்டலை எடுத்துக் கொண்டு.கிளம்பினார் தேவர். எதிரே ரோந்து சுற்றியவாறே வந்து கொண்டிருந்த இரண்டு கான்ஸ்டபிள்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டு மலையடிவாரத்திற்குப் பேர்கும் சிறு சாலை வழியே சென்றுகொண்டிருந்தார். ஆவடை நாயகர் தோப்பை ஒட்டிச் செல்லும் அந்தச் சாலையில் குறுக்கே அமைந்திருந்த வாராவதியின் பக்கம் வந்திருப்பார். வாராவதியின் கீழ்ப்பக்கத்திலிருந்து வாட்ட சாட்டமான மனிதன் ஒருவன் மேலே ஏறிக்கொண்டிருந்தான். ஒருகணம் அவனுடைய பெருமித நடை, உயரத்தை தாமாகவே அளவிட்டன. அவர் கண்கள். அந்த மனிதனுடைய போக்கில் அவருடைய கவனம் கவரப்பட்டதே ஒழிய சந்தேகம் அதிகம் எழவில்லை, நல்லமுத்துத் தேவருக்கு. எனவே அவர் மேலே நடந்தார். பின்னாலே வந்த் கான்ஸ்டேபிள்களில் ஒருவன் சும்மா இராமல் மேலே ஏறி வந்த அந்த மனிதனை, ‘ஏய்