பக்கம்:மூவரை வென்றான்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

மூவரை வென்றான்/ஊசிக்கொண்டைத்...


யாரங்கே? இந் நேரத்தில் உனக்கு இங்கே என்ன வேலை? இப்படிக் கிட்டவா பார்ப்போம்’ என்று அதட்டிவைத்தான்.

வாராவதியில் ஏறினவன் பதில் கூறினான்:-

‘யார்? கான்ஸ்டேபிள் தங்கராஜா? உனக்கு எப்பொழுது இவ்வளவு தைரியம் வந்த்து அண்ணே நீ இரவிலே வெளியிலேகூட நடமாடுவது உண்டா? அப்போ, உன் தைரியம் வளர்ச்சியடைந்துவிட்டதென்று சொல்லு’ ... ஒரு கணம் தங்கராஜுக்கு மண்டையில் ஆணி அடித்தாற் போல இருந்தது... அவனுக்கு அந்தக் குரலிற்குரியவனின் நினைவு வந்தது. இன்ஸ்பெக்டருக்கு ஜாடை காட்ட முன் புறம் திரும்பினான். கான்ஸ்டேபிள்கள் இரண்டுபேரும். வெறுங்கையர்களாய் வந்திருந்தனர். தற்செயலாய்ப் பேச்சு வளருவதைக் கண்ட நல்லமுத்துத் தேவர், கான்ஸ்டேபிள் யாரிடமோ வம்படிக்கிறான் என்று அவனை அதட்டப் பின் புறம் திரும்பினார். இதற்குள் வாராவதியில் ஏறிய மனிதன் இன்ஸ்பெக்டரின் பக்கமாக வந்தான். புதிதாக வந்து சேர்ந் தவனாகையால் மற்றொரு கான்ஸ்டேபிள் தங்கராஜின் திகைப்பைக் கண்டு காரணம் புரியாமல் நின்றான்.

‘என்ன இன்ஸ்பெக்டர் சார்! ஏது, இந்த நேரத்தில் எங்கோ கிளம்பிவிட்டாற்போல் இருக்கிறது: ரொம்பத் தொலைவா...இல்லை, பக்கத்தில்தானா? என்று கேட்டுக் கொண்டே அவரை நெருங்கின்ான். வந்தவன் இன்னாரென்று புரிந்துகொள்ளாமல் திகைத்தவாறே வந்துகொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர்.

இந்த நிலையில் வந்தவன் தங்கராஜு நின்ற இடத்தையும் கடந்து வந்துவிட்டான். பின்னாலிருந்து இன்ஸ்பெக்ட ருக்கு ஏதோ ஜாடை காட்டிவிட்டு, ஒரே தாவாகத் தாவி வந்தவனுடைய தலைக்கொண்டையை இறுக்கிப்பிடித்தான் கான்ஸ்டேபிள் தங்கராஜ்! ஆனால் அடுத்த நொடியில் ‘ஐயோ’ என்ற அலறலுடன் கையை அவன் கொண்டையிலிருந்து எடுக்க முயன்று கொண்டிருந்தான். கையை எடுத்து விட்டான். ஆனால் கைமட்டுமா வந்தது? விரல் நீளமுள்ள