பக்கம்:மூவரை வென்றான்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

121


கூர்மையான ஊசிகள் சிலவும் கையின் மறுபுறம் வரை பாய்ந்திருந்தன. ரத்தம் வடியத் தொடங்கியது-தங்கராஜு வலி பொறுக்க முடியாமல் துடிதுடித்தவாறே நின்றுவிட் டான்-இதற்குள், நிலைமையைப் புரிந்துகொண்ட இன்ஸ் பெக்டர் பிஸ்டலை எடுத்தார். மற்றொரு கான்ஸ்டேபிள் தங்கராஜுவைத் தூரப் படுக்கவைத்துவிட்டு, வந்தவனை வளைத்தான்.

“ஏண்டா அப்பாவிப் பயலே! வீணாக ஏன் உயிரைக் கெடுத்துக்கொள்கிறாய், உன் கையில் ஏறியிருக்கும் ஊசிகள் விஷந் தோய்ந்தவை. ஒடிப் போடா. வைத்தியரைத் தேடி...இன்ஸ்பெக்டர் சார் வருகிறேன். மாயாண்டிக் காகத்தான் புறப்பட்டீர்களோ?” என்று கூறிக்கொண்டே நாலே எட்டில் வாராவதியைத் தாண்டி ஆவடையார் தோப்பில் நுழைந்துவிட்டான் மாயாண்டித்தேவன்.

இன்ஸ்பெக்டர் அனுப்பிய பிஸ்டல் குண்டுகள் வாராவதிச் சுவரில் மோதிச் சென்றன. மாயாண்டி தப்பிவிட்டான். அவனுடைய குதியங்கால்களின் அமைப்பு, ஓட்டத்திற்காகவே படைக்கப்பட்டவைபோல அமைந்திருந்தது. இன்ஸ்பெக்டருக்கு வியப்பளித்தது. கீழே கிடந்த தங்க ராஜுவை வலி கொன்று கொண்டிருந்தது. கூரிய ஊசிகள். நான்கைந்து உள்ளங்கையில் நுழைந்திருந்தன. வலி பொறுக்க முடியாமல் அலறிக்கொண்டிருந்த தங்க்ராஜ வின் பக்கம் வந்த இன்ஸ்பெக்டரும் மற்றொரு கான்ஸ் டேபிளும் கீழே விழுந்து கிடந்த ஒரு பிச்சுவாயைக் கண் டனர். அதன் பிடியில் எழுதியிருந்த ‘மாயாண்டித் தேவன்’ என்ற எழுத்துக்கள் நிலா ஒளியில் பளிச்சென்று தெரிந்தன. தங்கராஜூ கதறினான்... “சார், ஊசியில் விஷம் ஏறிக் கொண்டே போகிறதே, காப்பாற்றுங்கள் சார்”...என்று கதறினான். அந்தப் பிராந்தியம் முழுவதுமே எதிரொலித் தது அவன் கதறல். ரத்தம் வடிந்துகொண்டிருந்த அவன் கையிலிருந்த ஊசிகளின் அமைப்பு நல்லமுத்துத்தேவரைத் திடுக்கிடச் செய்தது, வேட்டுச் சத்தம் கேட்டுப் பக்கத்துத்