பக்கம்:மூவரை வென்றான்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

மூவரை வென்றான்/ஊசிக்கொண்டைத்...


தோப்புக்களில் காவலாக இருந்தவர்கள் இரண்டொருவர் வந்தனர். அவர்களின் துணைகொண்டு தங்கராஜுவை ஊருக்குள் தூக்கி வந்தனர். லோகல்பண்டு ஆஸ்பத்திரி டாக்டர் பாதி ராத்திரிக்கு அரைகுறை மனத்துடன் போலிஸ் ஸ்டேஷனுக்கு ஓடிவந்தார். முடிவில் தங்கராஜின் வலது முழங்கை வரை எடுக்க வேண்டி நேர்ந்தது. அழுத்த மாக விஷம் பாய்ச்சப்பட்டிருந்த ஊசிகள் முழங்கை வரை நஞ்சேற்றியிருந்தன... ஊசிகளைப் பரிசோதித்த டாக்டருக்கே அடிவயிறு கலங்கியது.

தங்கராஜூவின் வாக்குமூலத்திலிருந்து சில உண்மை. கள் நல்லமுத்துத் தேவருக்குத் தெரிந்தன. சுதர்சனராவ் காலத்தில் ஒரு நாள் இரவு, இன்று வாராவதிக்கு அருகில் கேட்ட இதே குரலுக்குரிய மனிதனாகிய மாயாண்டித்தேவனை முல்லையூற்று போலீஸ் ஸ்டேஷனில் சந்திக்க நேர்ந்தது. ஸ்டேஷனுக்குள் நுழைய முயன்று கொண்டிருந்த அவனை, அவனுடைய வளர்ந்து முடிந்திருந்த கோணற் கொண்டையைப்பற்றி இழுத்துத் தடுத்து விட்டான் தங்கராஜ். ஆனால் வந்தவன் கண்மூடித் திறப்பதற்குள் தங்கராஜின் மூக்கருகில் ஏதோ பச்சிலையை நீட்டினான். அவன் கையில் ஒரு பூக்குடலைபோன்ற பெட்டி இருந்தது. பிறகு நடந்தது ஒன்றும் தங்கராஜுக்குத் தெரியாதாம். விடிந்ததும் மயக்கந் தெளிந்த பிறகு கேஸ், சாட்சி, இந்த வம்புகளுக்குப் பயந்துகொண்டு, நடந்தது ஒன்றும் வெளியிலே தெரியாதவாறு மறைத்துவிட்டான் தங்கராஜ். பின்பு சுதர்சனராவ் அலறியதும் டிராயரில் பாம்பு இருந்ததைக் கண்டபோது மாயாண்டித்தேவன் வேலை என்பதும் இரவில் வந்தவன் அவனே என்பதும் குடலையில் அவன் கொண்டு வந்தது பாம்பு என்பதும் தங்கராஜுக்கு மட்டும் தெரிந்துவிட்டது. ஆனால் வெளியிடாமலே இருந்து விட்டான். போட்டோவை அன்று எடுத்துச் சென்றதும் மாயாண்டியின் வேலையே... அன்று தன் நீண்டு வளர்ந்திருந்த தலைக்கொண்டை தன்னைப் பிடிக்கக் காரணமானது கண்டே மாயாண்டித்தேவன் இந்த விஷ ஊசிகளை