பக்கம்:மூவரை வென்றான்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

123


வரிசையாகக் குத்திக்கொண்டு வெளியில் ெதரியாதவாடு முடிந்துகொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

வாக்குமூலம் பெற்றுக்கொண்ட பின், கையிழந்தது காரணமாக லேலையிலிருந்து தங்கரா நீக்கப்பட்டு விட்டான். அப்போதுதான் புதிதாக மணவாழ்வில் நுழைந் திருந்த் தங்கராஜூவுக்கு இது ஒரு இடியாகியது. சர்க்கார் அளித்த நஷ்டஈட்டுத் தொகையுடன் தன் சொந்த கிராமத் திற்குச் சென்று காலங் கடத்தி வந்தான் தங்கராஜு. அவ்வளவு துன்பத்திலும் அன்பு மாறாத அவன் மனைவி வள்ளியின் உள்ளம் அவனுக்கு ஆறுதல் அளித்தது. வள்ளியை அவன் மணந்துகொண்டதே ஒரு வேடிக்கையான கதை. முல்லையூற்றில் புவனநாயகர் கோவிலில் விளக்குத் துடைக்கும் பணி பார்த்து வந்த அந்த இளம் பெண் அனாதை என்றறிந்தபோது அவ்ன் அளவு கடந்த பச்சாதாபமடைந் தான். பச்சாதாபத்தின் படிப்படியான வளர்ச்சி, காதலாக, முடிந்தது. இளமையில் அவள் ஒர்ே சகோதரன் படுதுஷ்டனாக ஊரார் கரித்துக் கொட்டும்படி வாழ்ந்து வந்தானாம். அண்ணன் பரிபூரண ஆதரவு தந்தாலும் அவன் நடத்தையில் ஊர் உலகம் பழிக்கும்படியாக இருந்த அக்கிரமங்களைக் கண்டு வள்ளி பொறுக்க முடியாமல் ஓடி வந்துவிட்டாள். அதற்குப் பிறகுதான் முல்லையூற்றில் புவனநாயகர் கோவிலில் வேலை பார்த்து வந்தாள். பல நாள் பழக்கம். ஒரு நாள் தங்கராஜ-வள்ளி இருவரையும் ஊரறியத் திருமணம் என்ற பெயரில் தம்பதிகளாக்கியது. அது நடந்த சில மாதங்களில் தான் தங்கராஜு கையிழந்துவிட்டான். இதற்குப் பிறகு, முல்லையூற்றில் ‘மாயாண்டித்தேவன்’ என்ற பெயர் மறைந்து ‘ஊசிக் கொண்டை மாயாண்டித்தேவன்’ என்று உருவெடுத்து வழங்கலாயிற்று. நல்லமுத்துத்தேவர் குடும்ப வாழ்வையும் துறந்து, வேண்டிவந்த உத்தியோக உயர்வுக்கும் வழியின்றித் திண்டாடிக்கொண்டிருந்தார். வருடம் ஒன்றாகியும் மாயாண்டித்தேவனைப் பிடிக்கமுடியவில்லை. என்ன வழி