பக்கம்:மூவரை வென்றான்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

மூவரை வென்றான/ஊசிக்கொண்டைத்...

சுதர்சனராவ் காலத்திலிருந்தே இந்தப் பயல் தங்கராஜாவை எனக்கு நன்றாகத் தெரியும். அவன் உயிரை நொடிக்குநொடி குறி வைத்திருக்கிறேன் நான். காரணம்?...இவன் சுதர்சன ராவின் வேட்டை நாய்போல என்னைப் பிடிக்க முயன்று சுற்றிக்கொண்டிருந்ததுதான். கடைசியில் கையாலாகாத வெறும் பயல் என்றறிருந்து கொல்லும் கருத்தை விட்டு விட்டேன். அப்பாவிப் பயல்’ என்ற இரகக்கத்தினால் தான் அன்று விஷ ஊசி ஏறியதைக்கூட எச்சரிக்கை செய்து விட்டுச் சென்றேன். ஆனால் இன்றல்லவா தெரிகிறது இவன் என் தங்கை வள்ளியின் கணவனென்பது? சொந்தத் தங்கையின் கணவன் கையிழக்கக் காரணமாக இருக்கும் அளவிற்குக் கொடிய பாதகனா நான்? மாயாண்டியின் மனத் தினுள் ஏதோ ஒன்று கேட்ட இந்தக் கேள்வி அவனைக் கொல்லுவதுபோலிருந்தது. உணர்ச்சிகளுக்கு இளகாத அவன் உருக்கு மனம் இப்போது இனம்புரியாது கரையைத் தொடங்கியது.

“டேய்! ஒன் தர்ட்டி ஃபோர்! டு நாட் த்ரீ! உம்ம்! ஏன் நிற்கிறீர்கள்? லாரியில் ஏற்றி ஸ்டேஷனுக்குக் கொண்டு போங்கள்... நான் மேலே ஆபீஸுக்குத் தந்தி கொடுத்துவிட்டு ஸ்டேஷனுக்கு வருகிறேன்”... இன்ஸ்பெக்டர் நல்லமுத்துத் தேவரின் குரல் மாயாண்டித்தேவனுக்குத் தன் சூழ்நிலையை உணர்த்தியது. கான்ஸ்டேபிள்கள் இருவர் தாங்கிக்கொடுத்த முழங்காலைப் பிடித்துக்கொண்டு லாரியில் ஏறினான் அவன். எந்த வள்ளியின் பேச்சுக்களை அலட்சியம் செய்தானோ, அதே வள்ளியினால் இன்று கண்ணிர் சிந்தினான், கைதானான். அவளுக்குத் தான் செய்த துரோகத்திற்குப் பரிகாரம் என்ற பேரிலாவது போலீஸார் அளிக்கும் ஆயுள் தண்டனையைத் தான் அடையவேண்டுமென்ற துக்கமயமான ஆவலொன்று அவன் உள்ளத்தில் தோன்றியது. திருவிழாக் கூட்டத்தில் தங்கராஜு கூச்சலிட்டுத் தன்னைக் காட்டிக் கொடுத்தபோது மாயாண்டி விரும்பியிருந்தால் நொடிப் பொழுதில் தப்பியிருக்க முடியும். தன்னைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கென்று போலீஸார் விளம்பரம் செய்திருந்த