பக்கம்:மூவரை வென்றான்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

127


தொகையை தங்கராஜு-தன் தங்கையின் கணவன்-பெற வேண்டுமென்று கருதியோ என்னவோ மாயாண்டி அகப்பட்டுக்கொண்டான்.

சிறையில் அடைப்பதற்கு முன் ஒரு பாக நீளம் வளர்ந் திருந்த மாயாண்டியின் கொண்டை மயிர் சிறை வழக்கப்படி நீக்கப்பட்டுவிட்டது. அதைக் கத்தரித்தபோது ஊசிகள் விஷமேறியவைகளாதலால் பத்திரமாக அப்புறப்படுத்தப் பட்டன. ஆனால், மொட்டைத் தலையோடு திகழ்ந்த அந்தப் பழம்பெரும் கைதியின் பெயராகப் போலீஸ் ரிகார்டில் இருக்கும் பெயர் என்னவோ இன்னும் ஊசிக்கொண்டை மாயாண்டித்தேவனென்பதுதான். தங்கராஜூ விளம்பரத் தொகை ஆயிரம் ரூபாயை அடைந்தான். தன் மனைவியின் கூடப்பிறந்தவன்தான் மாயாண்டி என்பதை அவனோ, தன் அண்ணன்தான் மாயாண்டி என்பதை வள்ளியோ, கடைசி வரை அறியவில்லை. “ஊசிக்கொண்டை மாயாண்டித்தேவன்” என்ற உலகறிந்த பெயர் அளவில்தான் அவர்களும் அவனை அறிந்திருந்தார்கள்.