பக்கம்:மூவரை வென்றான்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

மூவரை வென்றான்


“யாரிடம் காட்டுகிறாய் இந்தப் பூச்சாண்டி? தேவ தானம் ஜமீன் மேற்கேயும், சாப்டூர் ஜமீன் வடக்கேயும் எனக்கு உதவி செய்ய எந்த நேரமும் தயாராக இருக் கின்றன. நீ மட்டும் எங்கள் மூன்று பேரையும் வென்று காட்டு, உன்னால் முடிந்தால் இந்த நத்தம்பட்டி ஜமீனையே உனக்கு ஜாரி செய்துவிட்டுச் சந்நியாகி விடுகிறேன் நான்.”

“நீங்கள் வணங்கும் குலதெய்வத்தின்மேல் ஆணையாக, உங்களைப் பெற்ற தாயின் பத்தினித்தன்மைமேல் ஆணையாக நீங்கள் இதைச் செய்வீர்களா?”

“எங்கள் மூன்று பேரையும் நீ வென்றுவிட்டால் கண்டிப்பாக இதை நான் செய்கிறேன். நாங்கள் வென்று விட்டாலோ நீ உன்னுடைய இனாம் கிராமத்தை எனக்கு. ஜாரி செய்துவிட்டுச் சந்நியாசியாகப் போகவேண்டும்: சம்மதந்தானா?”

“ஆகா! கண்டிப்பாக.”

“வீரமல்லா! யோசித்துப் பேசு. நாங்கள் மூன்று. பெரிய ஜமீன்தார்கள். நீயோ ஒரு சிறு கிராமத்தின் இனாம்தார். எறும்பு. யானையோடு பந்தயம் போடலாமா?”

‘வீண் பேச்சு எதற்கு மருதுத் தேவரே! நாளை மறு நாள் இராத்திரி ஏழரை நாழிகையிலிருந்து பத்தரை நாழிகை வரை உங்களுக்கு நேரம் தருகிறேன். அந்த மூன்று நாழிகை நேரத்தில் தெற்கேயிருந்து நீங்களும், வடக்கேயிருந்து சாப்டூர் ஜமீன்தாரும், மேற்கேயிருந்து தேவதானம் ஜமீன் தாரும், அவரவர் ஆட்களோடு என் இனாம் கிராமத்து. எல்லைக்குள் நுழைய முயற்சி செய்யவேண்டியது. முடிந்தால் உங்களுக்கு வெற்றி; முடியாவிட்டால் எனக்கு வெற்றி.”

“அது சரிதான்! ஆனால் மூன்று நாழிகைக்குள் என்று நீ நிபந்தனை போடுவதன் சூக்ஷமம் என்ன?”

“சூசுமம் ஒன்றுமில்லை! நீங்கள் மூன்று பெரிய ஜமீன் தார்கள் மூன்று திசையிலிருந்து தாக்க முயலுகிறீர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/16&oldid=508083" இலிருந்து மீள்விக்கப்பட்டது