பக்கம்:மூவரை வென்றான்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

19


சமயம் மேற்கே ஜமீனுக்குச் சொந்தமான மூன்று கண்மாய்களையும் யாரோ உடைத்துவிட்டார்கள். ஆற்றில் ஆள் இறங்க முடியாதபடி பிரவாகம் சுழித்தோடத் தலைப்பட்டது. வடக்கே வீரமல்லனின் கண்மாய் வடிகால் உடைத்துக் கொண்டு வெள்ளக்காடாயிற்று மூன்று திசையிலும் நின்ற மூன்று ஜமீன்தார்களும் அண்டமுடியாதபடி, கிராமத்தைத் தீவாக ஆக்கிவிட்டுச் சுற்றி ஒரே பிரவாகமாகப் பெருகி ஓடியது உடைப்பு வெள்ளம். மேற்கே நின்ற தேவதானம் ஜமீன் ஆட்கள் ஒரு வகையிலும் மீள வழியின்றி வெள்ளக் காட்டின் இடையே திகைத்து நின்றனர்.

வடக்கே இருந்த சாப்டுர் ஜமீன் ஆட்களும், தெற்கே இருந்த நத்தம்பட்டி ஜமீன் ஆட்களும் கிழக்குத் திசையில் கிராம எல்லைக்குள் நுழைவதற்காக் ஓடினார்கள்.

‘என்ன ஆச்சரியம்! கிழக்கே கிராம எல்லையைச் சுற்றி வளைத்துக்கொண்டு, நெருப்பு எரிந்துகொண்டிருந்தது, உள்ளே நுழைய இம்மியளவும் இடம் கிடையாது.

மூன்று திசையிலும் வெள்ளப் பிரவாகம் மறுநாள் காலைவரை ஒயவே இல்லை, நெருப்பு, முதல் நாள் இரவு பன்னிரண்டு நாழிகைக்குத்தான் அணைந்தது. தலைகீழாக நின்று பார்த்தும் ஜமீன்தார்களால் குறித்த மூன்று நாழி கைக்குள் வீரமல்லனின் கிராம எல்லையில் நுழைய முடிய வில்லை. உதவிக்கு வந்த ஜமீன்தார்கள் வருத்தத்தோடு திரும்பிப் போனார்கள். வீரமருதுத்தேவர் சந்நியாசியாகிப் போனார்.

செப்புப் பட்டய நிபந்தனைப்படி நத்தம்பட்டி ஜமீன் விரமல்லனுக்குக் சொந்தமாய்விட்டது. வீரமல்லன் அன்று சாமர்த்தியமாக தனியாக இருந்து மூன்று ஜமீன்தார் கை சூடியதால், அவன் பரம்பரையினர் வாழும் இந்தக் கிராமமும் பிற்காலத்தில் ‘மூவரை வென்றான்’ என்றே வழங்கப்படலாயிற்று. இன்றுகூட இவ்வூரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/21&oldid=505880" இலிருந்து மீள்விக்கப்பட்டது