பக்கம்:மூவரை வென்றான்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

மூவரை வென்றான்/பெரிய...


நடத்தும் அயோக்கியன் ஒருவன் இருக்கிறான் என்பது எல்லோருக்கும் தெரியும். அவன் யாரென்றுதான் தெரியாது!

ஆனால் அயோக்கியன் தன் கூட்டத்தோடு வருவதும் கொள்ளையடித்துக் கொண்டு போவதும் ஒரு பெரிய மாயப் புதிராக இருந்ததே ஒழிய இனம் விளங்கவில்லை. அவனைப் பார்க்காமலேயே, அவன் இன்னாரென்று தெரிந்துகொள்ளாமலே ‘அவன் பெரிய மாயன்’, ‘அவன் பெரிய மாயன்’ என்று ஊரில் அவனைச் சொல்லிப் பழகி விட்டார்கள். இதன் விளைவாக முகம் தெரியாத அந்தத் திவட்டிக் கொள்ளைத் தலைவனுக்கும் பெரிய மாயன் என்ற பெயரே ஊரில் நிலைத்துவிட்டது. அவனுடைய பெயர் பொருத்தமாகத் தான் இருந்தது.

ஜமீன்தார் கவனிக்கவில்லை என்றால் மக்களுமா சும்மா இருந்து விடுவார்கள்? சிலரைப் பல நாள் ஏமாற்றலாம்: பலரைச் சில நாள் ஏமாற்றலாம் எல்லோரையுமே எப்போதுமே, ஏமாற்றி விட முடியுமா? வீடு வாசல், மாடு, மனை, சொத்து, சுகம் இவைகளெல்லாம் தொடர்ந்து பறிபோய்க் கொண்டே இருந்தால் யாருக்குத்தான் ஆவேசம் வராது?

ஜமீன்தாரிடம் முறையிட்டுப் பார்த்தார்கள். அவர் அந்த முறையீட்டை அக்கறையுடன் கேட்டதாகவே தெரிய வில்லை. மேலுக்கு ஏதேதோ சாக்குப் போக்குகளைக் கூறினார். பாராமுகமாக நடந்து கொண்டார்.

“அந்தக் கொள்ளைக் கூட்டம் கொலைக்கு அஞ்சாதது. நாம் வீணாக அவர்களை எதிர்த்து முரண்டினோமானால் நமக்குத்தான் கஷ்டங்கள் அதிகமாகும். பேசாமல் இந்த, அசட்டு எண்ணத்தை இப்போதே விட்டு விடுங்கள். எல்லாம். தானாகவே கொஞ்ச நாளில் ஒய்ந்துவிடும்” என்று பதில் கூறினார் ஜமீன்தார் விஜயாலய மருதப்பத் தேவர்.

அவருடைய பதில் எல்லோருக்கும் அதிருப்தியை உண்டாக்கியதோடல்லாமல் ஆத்திரத்தையும் உண்டாகிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/26&oldid=505905" இலிருந்து மீள்விக்கப்பட்டது