பக்கம்:மூவரை வென்றான்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

மூவரை வென்றான்/பெரிய...

முடியைக் கொப்பரைத் தேங்காய்ப் பருமனுக்குக் கோணல் கொண்டையாக வாரி முடிந்திருப்பார். அடர்ந்து வளர்ந்த நீண்ட புருவங்களின் கீழே கூரிய விழிகள் ஊடுருவிப் பார்க்கும் சக்தி வாய்ந்தவை. நீண்டு அகன்று பரந்த நெற்றியில் புருவங்கள் சந்திக்கும் கூடுவாய்க்கு மேலும் முன் நெற்றிக்குக் கீழும் வட்ட வடிவமாக ஒரு சந்தனப் பொட்டு விளங்கும். வெட்டரிவாள் நுனிகளைப்போன்ற மீசை அவருடைய முகத்தின் கம்பீரத்திற்கும் ஆண்மைக்கும். தனிச்சோபை அளித்தது.

மனிதரைப் பார்த்துவிட்டால் இவருக்கா ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும்? என்று வியப்ப்டைய நேரிடுமே ஒழிய நம்ப முடியாது விஜயாலய மருதப்பத் தேவரின் தகப்பனார் காலத்தில் ஜமீன் காரியஸ்தராக இருந்தார். தெய்வச்சிலையார். விஜயாலய மருதப்பத் தேவர் பட்டத்துக்கு வந்த பின்பும் சில காலம் அவரே காரியஸ்தராக இருந்தார். நாளடைவில் இளைய ஜமீன்தாரின் போக்கு விடலைத்தனமாக ஒழுங்கற்றிருப்பதையறிந்து கண்டிக்க முயன்றார். ஆனால், இளைய ஜமீன்தார் தெய்வச்சிலையாருடைய கண்டிப்பையோ, அறிவுரைகளையோ, சிறிதும் பொருட்படுத்தவில்லை. பொருட்படுத்தாமல் இருந்திருந்தால் கூடப் பரவாயில்லை. அவமானமும் அலட்சியமும் செய்யத் தலைப்பட்டார்.

தெய்வச்சிலையார் உயிரைவிட மானத்தையும் நேர்மை ஒழுக்கங்களையும் பெரிதாக மதிப்பவர். இளைய ஜமீன்தாரின் போக்குக்கும் தமக்கும் ஒத்துக்கொள்ளாது என்று உணர்ந்து காரியஸ்தர் பதவியிலிருந்து தாமாகவே விலகிக்கொண்டு விட்டார்.

அத்தகைய பழம்பெரும் வீரபுருஷர் இப்போது ஜனங்களின் பரிபூரணமான ஆதரவோடு தம்மால் முடியாதததைச் செய்யப் போகிறார் என்று கேள்விப்பட்டபோது ஜமீன்தாருக்கு அசூயை குமுறியது. நல்லது செய்யப் பொறுக்காத மனம் அவருக்கு. பிறர் செய்தாலும் அதைப் பொறுக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/28&oldid=507579" இலிருந்து மீள்விக்கப்பட்டது