பக்கம்:மூவரை வென்றான்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

27


மாட்டார். மங்கலக்குறிஞ்சியில் மட்டுமன்றிச் சுற்றுப்புறங்களில் இருந்த பிற ஜமீன் கிராமங்களிலும் இளைய ஜமீன்தாரைப்பற்றி இருந்த நம்பிக்கை முற்றிலும் அழிந்து விட்டது.

“தீவட்டிக் கொள்ளைக்காரர்கள் எங்கள் விடுவாசல், மனைவி மக்களைச் சூரையாடுகிறார்கள். இருட்டிவிட்டால் ஜமீன் கிராமங்களில் கொள்ளைத்தொல்லை சகிக்க முடிய வில்லை. இதற்கு ஏதாவது ஒரு வழி செய்யுங்கள்!” என்று புரிதாபத்தோடு முறையிடுபவர்களிடம், “சரிதான் உங்களுக்கு வேறு வேலை இல்லை. இதெல்லாம் சகஜம். இதற்குத் தான் இவ்வளவு பிரமாதமாக முறையிட ஓடிவந்துவிட்டீர்களோ? கொள்ளைக்காரர்கள் வந்தால் அதற்கு மீஜனும் ஜமீன்தாரும் என்ன செய்ய முடியுமாம்? எல்லாக் கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டுதான் காலத்ன்தக் கடத்த வேண்டும்?” என்று நிராதரவான கல்மனத்தோடு பதில் சொல்லுகிற ஜமீன்தாரிடம் யார்தான் நம்பிக்கை வைக்க முடியும்?

நம்பிக்கை இழந்த ஜனங்களுக்கு நம்பிக்கையை வைப்பதற்கு ஒருபுகலிடம் தேவையாக இருந்தது. தெய்வச்சிலையார் அந்தப் புகலிடத்தை அளித்தார். தெய்வச்சிலையார் ஜனங்களின் ஆதரவோடு கொள்ளைக்காரர்களை ஒழிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் என்ற செய்தி இளைய ஜமீன்தாருக்கு எட்டியது.

ஜமீன்தார் விஜயாலய மருதப்பத் தேவரிடமிருந்து தாம் உடனே தெய்வச்சிலையாரைச் சந்தித்துப் பேச விரும்புவதாக அதிகாரத் தோரணையில் உத்தரவு வந்தது. அந்த உத்தரவைக் கேட்டதும் தெய்வச்சிலையாருக்கு ஏற்பட்ட கோபத்தில் ‘வரமுடியாது’ என்று மறுத்திருப்பார். கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்ததில் போய் என்ன விஷயம் என்றுதான் கேட்டுவிட்டு வருவோமே என்று தோன்றியது. தெய்வச்சிலையார் ஜமீன் மாளிகைக்குப் போனார், இளைய ஜமீன்தாரைச் சந்திப்பதற்காக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/29&oldid=507745" இலிருந்து மீள்விக்கப்பட்டது